சூர்யா - மூவி பஃப் நடத்தும் மாபெரும் குறும்பட போட்டி - குறும்பட இயக்குநர்களுக்கு செம வாய்ப்பு!
Recommended Video

சென்னை : சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சத்யம் சினிமாஸின் மூவி பஃப் நிறுவனமும், இணைந்து கடந்த ஆண்டு குறும்பட போட்டி ஒன்றை நடத்தியது.
இதில் வெற்றி பெற்ற ஆனந்த் என்பவர் தற்போது திரைப்படம் இயக்கி கொண்டிருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குறும்பட இயக்குனர்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

குறும்பட போட்டி
இந்த ஆண்டும் சூர்யா - மூவி பஃப் நடத்தும் குறும்பட போட்டி நடக்கிறது. இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர்கள் ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.

திறமையான படைப்பாளிகள்
இந்த ஆண்டு போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் சி.இ.ஓ அரவிந்த் கூறியதாவது, "தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும்பட போட்டி நடைபெறுகிறது. புதிய கதைக்களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்த குறும்பட போட்டியை தொடங்கியிருக்கிறோம்.

ரசிகர்களை பரவசமடையச் செய்ய முடியும்
உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையை குறும்படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையை நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களை பரவசமடையச்செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப உதவி
இதற்கு எங்களுடன் நடிகர் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்தக் குறும்படங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை அளிக்க நாக் ஸ்டுடியோஸ் முன்வந்திருப்பதையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்.

ரொக்கப் பரிசுகள்
மூன்று நிமிட கால அளவிற்குள் குறம்படத்தை அனுப்பவேண்டும். போட்டியில் முதலிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மூன்று லட்ச ரூபாயும், இரண்டாமிடத்தை வெல்பவருக்கு இரண்டு லட்ச ரூபாயும், மூன்றாமிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

படம் இயக்க வாய்ப்பு
முதலிடத்தை வெல்லும் போட்டியாளருக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் தங்களின் கதை மற்றும் திரைக்கதையை கூற வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்.' என்றார்.


Click it and Unblock the Notifications











