26ம் தேதி வட இந்தியாவில் கர்ஜிக்கப்போகும் 'மெய்ன் ஹூன் சூர்யா சிங்கம் 2'
சென்னை: சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் இந்தி டப்பிங் வரும் 26ம் தேதி வட இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்த சிங்கம் 2 படம் கடந்த 4ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தில் சூர்யாவின் நடிப்பு அபாரம் என்று விமர்சகர்கள் புகழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் சிங்கம் 2 இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தியிலும் சிங்கம் 2 என்ற பெயரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் ஒரு சிக்கல் எழுந்தது.

அஜய் தேவ்கன்
சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த அஜ்ய தேவ்கன் தற்போது சிங்கம் 2 என்ற பெயரில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனால் சூர்யாவின் படத்திற்கு வேறு பெயர் தேடினர்.

மெய்ன் ஹூன் சூர்யா சிங்கம் 2
சிங்கம் 2 படம் இந்தியில் மெய்ன் ஹூன் சூர்யா சிங்கம் 2 என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

26ம் தேதி ரிலீஸ்
மெய்ன் ஹூன் சூர்யா சிங்கம் 2 வரும் 26ம் தேதி வட இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது. வட இந்தியர்கள் சூர்யாவை ஏற்கனவே ராம் கோபால் வர்மாவின் ரக்த சரித்திரம் படத்தில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











