கோட் மாட்டினா வக்கீல்.. வேட்டிக் கட்டினா நான் தான் ஜட்ஜ்.. வெளியானது எதற்கும் துணிந்தவன் டிரைலர்!

சென்னை: பெண்கள் வீக்கர் செக்ஸ் என வில்லன் வினய் சொல்வதும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா பேசும் வெறித்தனமான பன்ச் வசனத்துடன் தெறிக்கிறது எதற்கும் துணிந்தவன் டிரைலர்.

பொள்ளாச்சி சம்பவத்தை மாஸ் மசாலா ஆக்‌ஷன் கதைக்களத்துடன் இயக்குநர் பாண்டிராஜ் எடுத்துள்ளார் என்பது டிரைலரை பார்க்கும் போதே தெளிவாக தெரிகிறது.

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன்.

டிரைலர் வெளியீட்டு விழா

டிரைலர் வெளியீட்டு விழா

வரும் மார்ச் 10ம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை முன்னிட்டு இன்று சத்யம் திரையரங்கில் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியையும் எதற்கும் துணிந்தவன் படக்குழு நடத்தி உள்ளனர். சூர்யா, சத்யராஜ், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த விழாவில் பேசி உள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில்

பாண்டிராஜ் இயக்கத்தில்

கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி கார்த்திக்கு வேற லெவல் ஹிட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ் நடிகர் சூர்யாவுக்காக எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி உள்ளார். வெறும் மாஸ் மசாலா என்டர்டெயினராக மட்டுமின்றி ஒரு நல்ல சோஷியல் மெசேஜ் இருக்க வேண்டும் என சூர்யா நினைத்த நிலையில், பொள்ளாச்சி சம்பவத்தை கதைக்குள் கச்சிதமாக புகுத்தி இருக்கிறார் பாண்டிராஜ்.

வேட்டி கட்டுனா ஜட்ஜ்

வேட்டி கட்டுனா ஜட்ஜ்

ஜெய்பீம் படத்தில் கோட்சூட் போட்டுக் கொண்டு வக்கீலாக நடிகர் சூர்யா வாதாடிய நிலையில், நான் கோட்சூட் போட்டா வேற ஒருத்தர் ஜட்ஜ்.. ஆனால், வேட்டிக் கட்டினால் நான் தான் டா ஜட்ஜ் என பஞ்ச் வசனம் பேசும் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. இந்த படத்திலும் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது தெளிவாகி உள்ளது.

வில்லன் வினய்

வில்லன் வினய்

பெண்கள் எல்லாம் வீக்கர் செக்ஸ் எனும் வசனத்துடன் டெரர் என்ட்ரி கொடுத்துள்ளார் வில்லன் வினய். பெண்களை ஆபாசமாக படமெடுத்து அதை வைத்து அவர்களை மிரட்டுவதும், பெண்களை தற்கொலைக்கு தூண்டுவதுமாக படுமோசமான காரியங்களை தனது டீமை வைத்துக் கொண்டு செய்யும் கொடூர வில்லனாக இந்த படத்தில் வினய் நடித்துள்ளார்.

பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல

நடிகர் வினய்க்கு டிரைலரிலேயே சூர்யா பதிலடி கொடுக்கும் வசனத்தையும் இயக்குநர் பாண்டிராஜ் வைத்துள்ளது சிறப்பு. பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல என்றும் அப்படி பேசுறவங்கள பளார்னு ஒண்ணு வைங்க என்றும் சூர்யா சொல்லும் இடம் நிச்சயம் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளும் என தெரிகிறது. ஏகப்பட்ட சீரியஸான விஷயங்களுக்கு இடையே டிரைலரில் இடையிடையே வரும் காமெடி காட்சிகளும், காதல் காட்சிகளும் இந்த படம் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. மார்ச் 10ம் தேதி சூர்யா ரசிகர்கள் திரையரங்குகளில் மாஸ் காட்ட தயாராகி வருகின்றனர்.

வலிமை வசூலை முந்துமா

வலிமை வசூலை முந்துமா

சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஒடிடியில் வெளியான நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா படத்தையும் தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் 120 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில், எதற்கும் துணிந்தவன் அந்த ரெக்கார்டுகளை அடித்து நொறுக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X