இதுதான் ரியல் 10 இயர் சேலஞ்ச்.. ’சூரரை போற்று’ ஃபர்ஸ்ட் லுக் குறித்து பிரபலங்கள் ட்வீட்!

சென்னை: சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் 5 லட்சத்திற்கும் மேலான ட்வீட்கள் #SooraraiPotruFirstLook ஹேஷ்டேகில் பகிரப்பட்டு, இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

சூர்யாவின் பாடி ஃபிட்டை ஃபர்ஸ்ட் லுக்கில் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாய் பிழந்து பாராட்டி வருகின்றனர்.

உயர பறப்பது

சூர்யாவின் சூரரை போற்று ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து வியந்த நடிகர் ஆர்யா, உயர பறப்பது எப்போதுமே சந்தோஷமான விஷயமென எமோஜிகளை வைத்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், இயக்குநர் சுதா கொங்கராவையும் பாராட்டியுள்ளார். சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான காப்பான் படத்தில் நடிகர் ஆர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட் ஒர்க்

சூரரை போற்று ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த நடிகை அதுல்யா ரவி, சூர்யா சாரின் ஹார்ட் ஒர்க் மொத்தம் இந்த ஃபர்ஸ் லுக்கிலே தெரிகிறது. ஓ மை காட் சூர்யா இந்த லுக்கில் பயங்கர ஹேண்ட்சம்மாக இருக்கிறார் என சூர்யா லுக் மீது கண்ணும் வைத்துள்ளார்.

இன்ஸ்பிரேஷன்

சென்னை 28, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் நிதின் சத்யா, சூர்யாவின் இந்த மாரா லுக்கை பார்த்துவிட்டு இன்ஸ்பிரேஷன் வாவ்! என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாடலாசிரியர் விவேக் கருத்து

மெர்சல், பிகில் என தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி கொடுத்துக் கொண்டிருக்கும் பாடலாசிரியர் விவேக், சூர்யாவின் இந்த மரண மாஸ் காட்டும் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு, 'Upwords and Onwards' என கமெண்ட் செய்துள்ளார்.

10 இயர் சேலஞ்ச்

2009ம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தில் எப்படி இருந்தாரோ சூர்யா, அதேபோல 10 ஆண்டுகள் கழித்து 2019ம் ஆண்டிலும் அதே கட்டுமஸ்த்தான உடலுடன் தோற்றம் அளிக்கிறார் என அயன் மற்றும் சூரரை போற்று ஃபர்ஸ்ட் லுக் படங்களை பதிவிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

புஷ்கர் – காயத்ரி

விக்ரம் வேதா படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி, தனது நெருங்கிய நண்பரான சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து படம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரிய வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இது என பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X