சூர்யாவின் 'சூரரைப் போற்று' ஷூட்டிங்... ஆத்தாடி, ஒரு நாள் விமான வாடகை இவ்ளோவா? மயங்கிடாதீங்க மக்களே!
சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் பட்ஜெட் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏர் டெக்கான் விமான நிறுவனரான பெங்களூரைச் சேர்ந்த் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.
இதில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார். 'துரோகி', 'இறுதிச் சுற்று' படங்களை இயக்கிய சுதா கொங்கரா இதை இயக்கியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார்
படத்தில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

டீசர் வரவேற்பு
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான முதல் நாளிலேயே அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வாடகை விமானம்
விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

ஒரு நாள் வாடகை
இந்த விமானத்துக்கு ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.47 லட்சமாம். 15 நாள் என்றால் கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால்தான் பட்ஜெட் அதிகமானது என்கிறார்கள்.

கதைக்காக
படத்துக்காக, இன்னும் சில நாட்கள் பேட்ச் ஒர்க் இருக்கிறது. இதற்காகவும் விமானத்தை வாடகைக்கு அமர்த்த உள்ளனர். இந்தக் கதைக் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புவதால், சூர்யா பணத்தைப் பற்றி கவலைப்படாமல் செலவு செய்துள்ளார் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











