சூர்யா பட டைட்டில் தமிழில் 'சூரரை போற்று'...இந்தியில் என்ன தெரியுமா ?
சென்னை : கடந்த ஆண்டு வெளியாகி, மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று சூர்யா நடித்த 'சூரரை போற்று'. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனாவால் தியேட்டரில் வெளியிட முடியாமல் போனாலும், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டு, வெற்றி பெற்றது. இந்த படம் சூர்யாவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததுடன், ரியல் ஹீரோவாகவே மக்கள் பார்க்கும் அளவிற்கு மாற்றி உள்ளது.
சூர்யாவின் 2 டி என்டர்டைன்மென்ட் தயாரித்த இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தியில் இந்த படத்திற்கு 'உதான்' என பெயரிடப்பட்டுள்ளது. விமானம் என பொருள்படும் வகையில் 'உதான்' என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் சூரரை போற்று என்ற பெயரிலேயே வெளியிடப்பட்ட இந்த படம் இந்திக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கேப்டன் கேபிநாத்தின் வாழ்க்கையை நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.


Click it and Unblock the Notifications











