ஷாங்காய் திரைப்பட விழாவில் சூர்யாவின் 'சூரரை போற்று'

சென்னை : சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'சூரசை போற்று' படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் ஆஸ்கார் பரிந்துரை பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டது. தற்போது இந்த படம், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்ல உள்ளது.

Suriyas Soorarai Pottru in Shanghai International Film Festival

இந்த ஆண்டு ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஜுன் 11 ம் தேதி துவங்கி ஜுன் 20 வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காலம் என்பதால் இந்த ஆண்டு, ஷாங்காய் திரைப்பட விழா ஷாங்காய் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் 'சூரரை போற்று' படம் திரையிடப்பட உள்ளது.

சுதா கொங்கரா இயக்கிய சூரரை போற்று படம், ஏர் டெக்கன் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சில புதிய சுவாரஸ்யமான அம்சங்களையும் இணைத்து இந்த படத்தை அவர் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கிருஷ் குமார், ஊர்வசி, கருணாஸ், பரேஷ் ராவல் என அனைவரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டை பெற்றது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இவரின் அழுத்தமான இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X