ஆஸ்கருக்கே அனுப்பி வச்சாங்க.. அங்க ரிலீஸ் பண்ணாமலா.. இந்தியில் ரிலீஸ் ஆகும் சூரரைப்போற்று!
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரிலீஸ் ஆகவுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
இதேபோல் மோகன் பாபு, பரேஷ் ராவல், ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல்வேறு எதிர்ப்புகளை மீறி நவம்பர் 12ஆம் தேதி ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது.

ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஜிவி பிரகாஷ் மியூஸிக்
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்தியில் ரிலீஸ்
இந்தப் படம் ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படம் தற்போது இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சூரரைப்போற்று படத்தை இந்தியில் 'உடான்' என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளனர்.

ஏப்ரல் 4ஆம் தேதி
இப்படத்தை வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தேதி அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரரைப் போற்று படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











