twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோல்டன் குளோபை தவற விட்ட சூர்யாவின் சூரரைப் போற்று.. ஆஸ்கர் போட்டியிலாவது இடம் கிடைக்குமா?

    |

    சென்னை: 78வது கோல்டன் குளோப் பரிந்துரை பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

    3 சுற்றுகள் வரை வெற்றிகரமாக சூர்யாவின் சூரரைப் போற்று தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பரிந்துரை பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

     சிரிச்சே செத்துட்டேன்.. தன்னைப்பற்றிய மீம்ஸ்களை ரசித்த மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்! சிரிச்சே செத்துட்டேன்.. தன்னைப்பற்றிய மீம்ஸ்களை ரசித்த மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்!

    ஆனால், பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் எந்த ஒரு பிரிவிலும் இடம் பெறவில்லை.

    10 பிரிவுகளில் அமேசான் பிரைம்

    10 பிரிவுகளில் அமேசான் பிரைம்

    அமேசான் பிரைம் தயாரிப்பில் வெளியான படங்கள் 7 பிரிவுகளிலும் தொடர்கள் 3 பிரிவுகளிலும் என மொத்தம் 10 பிரிவுகளில் கோல்டன் குளோப் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படமும் அமேசான் பிரைமில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    போராடிய மாறா

    போராடிய மாறா

    சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்ற மாறாவின் போராட்டத்தை போலவே கோல்டன் குளோபில் ஒவ்வொரு சுற்றிலும் மற்ற வெளிநாட்டு திரைப்படங்களுடன் கடுமையாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் கடுமையாக போராடி 3 சுற்றுகள் வரை முன்னேறியது.

    இறுதிச்சுற்றில் தோல்வி

    இறுதிச்சுற்றில் தோல்வி

    இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 78வது கோல்டன் குளோப் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. அமேசான் பிரைமில் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    ஆஸ்கர் ரேஸ்

    ஆஸ்கர் ரேஸ்

    கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளுக்கு சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை போட்டியிட படக்குழு அனுப்பியுள்ளது. இந்தியா சார்பாக மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு படம் தான் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒடிடியில் வெளியான படங்களையும் ஆஸ்கருக்கு அனுப்பலாம் என்கிற ஆப்ஷனில் சூரரைப் போற்று ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொண்டு திரையிடப்பட்டுள்ளது.

    பாராட்டுக்கள்

    பாராட்டுக்கள்

    கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் கமிட்டியினர் சூரரைப் போற்று திரைப்படத்தை திரையிட்டு பார்த்து தமிழில் இருந்து இப்படியொரு படம் உருவாகி இருப்பதை மிகவும் பாராட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஸ்கர் பரிந்துரை பட்டியலிலாவது சூர்யாவின் சூரரைப் போற்று இடம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Suriya’s Soorarai Pottru not selected in 78th Golden Globe nomination list, which was announced today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X