twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜல்லிக்கட்டு திரைப்படம் பின் வாங்கிய நிலையில் ஆஸ்கர் ரேஸில் முன்னேறியுள்ளது சூரரைப் போற்று!

    |

    சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் முன்னேறி உள்ளது.

    2டி நிறுவனம் தயாரிப்பில் அமேசான் பிரைமில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது சூரரைப் போற்று திரைப்படம்.

    சிம்பு- கௌதம் மேனனின் புதிய படம்..நதிகளிலே நீராடும் சூரியன்! சிம்பு- கௌதம் மேனனின் புதிய படம்..நதிகளிலே நீராடும் சூரியன்!

    கொரோனா காரணமாக ஒடிடி படங்களும் ஆஸ்கருக்கு போட்டியிடலாம் என்கிற விதிப்படி சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது.

    இந்தியா சார்பாக

    இந்தியா சார்பாக

    ஆண்டு தோறும் இந்தியா சார்பாக சிறந்த அயல் மொழி திரைப்படத்திற்கான போட்டியில் பங்கேற்க ஒரு திரைப்படம் அனுப்பப்படும், கடந்த ஆஸ்கர் போட்டிக்கு ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த கல்லி பாய் அனுப்பப்பட்டு நாமினேஷன் பட்டியலுக்கு முன்பே வெளியேறியது. இந்த ஆண்டு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஆஸ்கர் போட்டிக்கு அரசு சார்பாக அனுப்பப்பட்டது.

    வெளியேறியது

    வெளியேறியது

    பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம், சமீபத்தில் ஆஸ்கர் அறிவித்த சிறந்த அயல் மொழித் திரைப்படங்கள் பட்டியலில் இடம்பெறாமல் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த முறையும் நாமினேஷனுக்கு கூட இந்திய படம் தேர்வாகாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    முன்னேறும் மாறா

    முன்னேறும் மாறா

    ஜல்லிக்கட்டு திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ள அசத்தலான அறிவிப்பை தற்போது ஆஸ்கர் அமைப்பு அறிவித்துள்ளது. இறுதி கட்ட நாமினேஷன் போட்டிக்கு போட்டியிடும் படங்களின் லிஸ்டில் சூரரைப் போற்று, சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

    ஒரே இந்திய படம்

    ஒரே இந்திய படம்

    உலகளவில் சுமார் 366 படங்களில் ஒரே இந்திய படமாக இறுதிகட்ட ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற வேண்டிய போட்டியில் போராட தேர்வாகி உள்ளது சூரரைப் போற்று. வரும் மார்ச் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை இதற்கான வோட்டிங் நடைபெறும், வரும் மார்ச் 15ம் தேதி இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வெளியிடப்படும்.

    சாதிப்பாரா சூர்யா

    சாதிப்பாரா சூர்யா

    சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியிட்ட சூரரைப் போற்று, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் ஆவது சூர்யாவின் சூரரைப் போற்று இடம் பெற வேண்டும் என்பதே ஏகப்பட்ட இந்திய ரசிகர்களின் ஆசை. மார்ச் 15ம் தேதி வரை வெயிட் பண்ணி பார்ப்போம்.

    English summary
    Suriya’s Sooararai Pottru marching forwards to Oscar 2021. Soorarai Pottru selected along with 366 movies for final votings.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X