லாக்டவுனால் சிக்கல்.. தயாரிப்பாளர்கள் புது திட்டம்.. சூர்யாவின் 'சூரரைப் போற்று' ரிலீஸ் எப்போது?

By

சென்னை: சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Soorarai Pottru- Mannurunda Lyrical video | Surya | G.V.Prakash | Sudha Kongara

ஏர் டெக்கான் விமான நிறுவனரான பெங்களூரைச் சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.

இதில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

மோகன்பாபு

மோகன்பாபு

'துரோகி', 'இறுதிச்சுற்று' படங்களை இயக்கிய சுதா கொங்கரா இதை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

உயர்ந்தது பட்ஜெட்

உயர்ந்தது பட்ஜெட்

இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

விமானத்தில் பாடல்

விமானத்தில் பாடல்

இந்த விமானத்துக்கு ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.47 லட்சம். 15 நாள் விமானத்தில் ஷூட்டிங் நடந்துள்ளது. இதனால் பட்ஜெட் அதிகமானது என்கிறார்கள். இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, விமானத்தில் நடந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்திராத ஏழை மாணவர்கள் விமானத்தில் அழைத்துச்செய்யப்பட்டனர்.

லாக்டவுன் முடிந்ததும்

லாக்டவுன் முடிந்ததும்

இந்தப் படத்தை ஏப்ரல் இறுதி அல்லது மே 1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் மொத்த திட்டத்தையும் சிதைத்துவிட்டது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் முடிந்தது, ஆகஸ்ட் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X