twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து கன்னடத்துக்குப் போகும் 'சூரரைப்போற்று' சூர்யா... இதுதான் பர்ஸ்டாமே!

    By
    |

    Recommended Video

    Soorarai Pottru - Veyyon Silli Live | Sudha Kongara | Surya

    சென்னை: தெலுங்கு, மலையாள சினிமாவை அடுத்து நடிகர் சூர்யா, முதன்முறையாகக் கன்னட சினிமாவுக்குச் செல்கிறார்.

    ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.

    நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர்.

    மோகன்பாபு

    மோகன்பாபு

    தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு தமிழில், இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆகிறது.

    விமானத்தில் 15 நாள்

    விமானத்தில் 15 நாள்

    விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது.
    இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.
    இந்த விமானத்துக்கு ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.47 லட்சமாம். 15 நாள் விமானத்தில் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக பெருந்தொகையை செலவழித்துள்ளனர்.

    ஸ்பைஸ்ஜெட்

    ஸ்பைஸ்ஜெட்

    இந்தப் படத்தில் இடம்பெறும் வெய்யோன் சில்லி என்ற பாடலை விமானத்தில் சமீபத்தில் வெளியிட்டனர். ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் மற்றும் படத்தின் ஹீரோ சூர்யா இருவரும் வெளியிட்டனர். விமானத்தில் பயணிக்க வாய்ப்பில்லாத ஏழை குழந்தைகள் சுமார் 70 பேரை விமானத்தில் அழைத்துச் சென்று இந்த பாடலை வெளியிட்டனர்.

    சினிமா வாழ்க்கை

    சினிமா வாழ்க்கை

    இதுகுறித்து நடிகர் சூர்யா கூறும்போது, எனது 20 வருட சினிமா வாழ்க்கையில் இந்த படத்தை முக்கியமாக கருதுகிறேன். ரூ.1/- கட்டணத்தில் சாதாரண மனிதரையும் பறக்க வைத்து பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து சாதனை புரிந்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அவர் வாழ்க்கையைக் கூறும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக பெருமைபடுகிறேன் என்று தெரிவித்திருந்தார் சூர்யா.

    கன்னட சினிமா

    கன்னட சினிமா

    இந்நிலையில், இந்தப் படம் மூலம் கன்னட சினிமாவுக்கு செல்கிறார் சூர்யா. ஜி.ஆர்.கோபிநாத் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதால், இந்தப் படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிட உள்ளனர். பெரும்பாலும் தமிழ்ப் படங்கள் அங்கு நேரடியாகவே வெளியிடப்படும். ஆனால் இந்தப் படம் டப் செய்து வெளியிடப்படுகிறது. அங்கு டப் செய்து வெளியிடப்படும் முதல்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. மலையாளம், தெலுங்கைத் தொடர்ந்து கன்னடத்திலும் கால் பதிக்கிறார் சூர்யா. டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன.

    English summary
    Suriya has also made a name for himself among the Telugu and Malayalam fans with his dubbed films. Now, he's all set to explore the Kannada market, as his latest film Soorarai Pottru will be dubbed in Kannada.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X