Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Osaka tamil International film festival...6 விருதுகளை வென்ற சூரரைப் போற்று
சென்னை : சூர்யாவின் சூரரைப் போற்று படம் Osaka tamil International film festival வில் 6 விருதுகளை வென்றுள்ளது. இதற்காக படக்குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
டைரக்டர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்த படம் சூரரைப்போற்று. 2020 ம் ஆண்டு ரிலீசானது. கொரோனா காலத்தில், பல எதிர்ப்புக்களை மீறி நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
கொழுப்பை
குறைக்க
சர்ஜரி..
உயிரே
போச்சு..
21
வயது
நடிகையின்
சோகம்!

சூரரைப் போற்று இந்தி ரீமேக்
சர்வதேச அ்ளவில் பாராட்டை பெற்ற இந்த படம் பல விருதுகளை வென்றுள்ளது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதையும் சுதா கொங்கராவே இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. இதில் சூர்யா நடித்த ரோலில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார்.

6 விருதுகளை வென்ற சூரரைப் போற்று
சூரரைப் போற்று படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்ற நிலையில், தற்போது Osaka tamil International film festival வில் 6 விருதுகளை வென்றுள்ளது. இந்த தகவலை 2டி என்டர்டைன்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த டைரக்டர், சிறந்த நடிகர், சிறந்த ஆர்ட் டைரக்டர், சிறந்த தயாரிப்பு நிறுவனம் ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகர் சூர்யா
சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், சிறந்த டைரக்டர் விருது சுதா கொங்கராவிற்கும், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருது 2டி என்டர்டைன்மென்ட் , சிறந்த ஆர்ட் டைரக்டர் விருது ஜாக்கிவிற்கு கிடைத்துள்ளது. இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இத்தனை விருதுகளா
சூரரைப் போற்று படம் இதுவரை 35 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஓடிடியில் ரிலீசாகி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, விருதுகளை அள்ளி குவித்து வரும் ஒரே இந்திய படம் சூரரைப் போற்று தான். இந்த படம் ஆஸ்கார் விருதிற்காக கூட பரிந்துரைக்கப்பட்டது. படம் ரிலீசாகி 2 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த படம் பல விருதுகளை அள்ளி வருகிறது.

பல படங்களில் சூர்யா பிஸி
சூர்யா தற்போது பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். விரைவில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தையும் துவக்க உள்ளார். இதைத் தொடர்ந்து அயலான் டைரக்டர் ரவிக்குமார், அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் மற்றொரு படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இதுவும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை தானாம். இந்த படத்தை கேஜிஎஃப் படங்களை தயாரித்த ஹம்பாலா ஃபிலிம்ஸ் தான் தயாரிக்க உள்ளது.
சூர்யா தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது.