கட்டுக்கடங்கா கூட்டம், கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆன சூர்யா: வைரலான வீடியோ

By Siva

Recommended Video

ஆந்திராவில் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக கூடியதால் கேட் ஏறி தப்பிச் சென்றுள்ளார் சூர்யா.

ஹைதராபாத்: ஆந்திராவில் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக கூடியதால் கேட் ஏறி தப்பிச் சென்றுள்ளார் சூர்யா.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

ஆந்திரா, தெலுங்கானாவில் கேங் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

சூர்யா பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் கொண்டாடாமல் ஆந்திராவில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். ஆந்திராவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தியேட்டர்

தியேட்டர்

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள மேனகா தியேட்டருக்கு சென்றார் சூர்யா. தியேட்டர் நிர்வாகமே எதிர்பாராத அளவுக்கு கட்டுக்கு அடங்கா கூட்டம் கூடிவிட்டது.

கூட்டம்

ரசிகர்களின் கூட்டம் ஓவராக ஆனதால் வேறு வழியில்லாமல் சூர்யா தியேட்டரின் பின்பக்கம் உள்ள கேட்டில் ஏறிக் குதித்து சென்றுள்ளார். சாதாரண நபர் போன்று சூர்யா கேட்டில் ஏறிக் குதித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

காலில் விழு

காலில் விழு

ஆந்திராவில் சூர்யா செல்லும் இடம் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. முன்னதாக அவர் தனது ரசிகர்களின் காலில் விழுந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X