twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யாவின் சிறப்பான 4 கிளாஸிக் திரைப்படங்கள்: இன்னும் பார்க்கலன்னா கண்டிப்பா பார்த்துடுங்க…

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாகி விட்டார் நடிகர் சூர்யா.

    அதனை நிரூபிக்கும் வகையில் 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்று வரலாறு படைத்துள்ளார்.

    சூர்யாவின் திரைப் பயணத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியான 4 திரைப்படங்கள், அவர் தேசிய விருது பெற காரணம் எனக் கூறலாம்.

    வஸந்த் இயக்கிய 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சூர்யா, அந்தப் படத்தில் விஜய்யுடன் ஆக்ரோஷமாக மோதி ரசிகர்களை கவர்ந்திழுத்தார். முதல் படம் என்பதால் அவரது நடிப்பில் சில குறைகள் இருந்தாலும், சூர்யாவின் கூர்மையானக் கண்களும், தனித்த குரல்வளமும் பலரையும் சுண்டி இழுத்தன.

    ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த அண்ணாச்சி...முதல் ட்வீட் என்ன தெரியுமா? ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த அண்ணாச்சி...முதல் ட்வீட் என்ன தெரியுமா?

    வாரிசு என்றாலும் திறமை வேண்டும்

    வாரிசு என்றாலும் திறமை வேண்டும்

    பிரபல நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளம் சூர்யாவிற்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தாலும், வெற்றிக்கு வழி காட்டவில்லை. ஆனாலும், உறுதியாகவும் உத்வேகத்துடனும் நடைபோடத் தொடங்கிய சூர்யா தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், புதிய முயற்சிகளுக்கு தன்னை தயாராக வைத்திருந்தார்.

    பட்டைத் தீட்டிய பாலா

    பட்டைத் தீட்டிய பாலா

    சூர்யாவின் நடிப்பைக் கண்டு திரையுலகமே ஆடிப் போய் நின்றது 'நந்தா' திரைப்படத்தில் தான். 'சேது' படத்தின் இமாலய வெற்றிக்குப் பின்னர், சூர்யாவுடன் 'நந்தா' படத்தில் இணைந்தார் இயக்குநர் பாலா. அதுவரை சூர்யாவிடம் இருந்து நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அசுரத்தனமான நடிப்பை, திரையில் கொண்டுவந்தார். குரூரமும் கருணையும் நிறைந்த சூர்யாவின் கண்களும், ஏக்கங்களும் எகத்தாளமும் கொண்ட அவரது உடல் மொழியும் ரசிகர்களை பிரமிக்க வைத்தன. நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான சூர்யாவிற்கு, 'நந்தா' திரைப்படமே சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தது.

    அமீர் செய்த மாயம்

    அமீர் செய்த மாயம்

    இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக வேலைப்பார்த்த அமீருடன் சூர்யாவிற்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இதன் நீட்சியாக அமீர் இயக்குநராக அறிமுகமான 'மெளனம் பேசியதே' படத்தில் சூர்யா ஹீரோவானார். திரிஷா இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். நண்பர்கள், ரெஸ்டாரண்ட், காதல் மீது வெறுப்பு, அடுத்து ஒருதலையாக காதல், பின்னர் ஏமாற்றம், இறுதியில் காதலின் யாதார்த்தம் என அனைத்தையும் உணரும் ஆர்ப்பாட்டமில்லாத பாத்திரத்தில் அசத்தியிருப்பார் சூர்யா. 'மெளனம் பேசியதே' வெற்றிப் படமாக இல்லையென்றாலும், இப்படத்தில் சூர்யாவின் மிகச் சிறந்த நடிப்பிற்கு ரசிகர்கள் ஏராளம்.

    கிருஷ்ணாவின் காதல் ட்ரீட்

    கிருஷ்ணாவின் காதல் ட்ரீட்

    சூர்யா - ஜோதிகா காதல் செய்தி உறுதியாகி இருவரும் திருமண பந்தத்தில் இணையவிருந்த நேரம் வெளியானது 'சில்லுன்னு ஒரு காதல்.' இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மேஜிக்கல் இசையில் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கல்லூரியில் பூமிகாவுடன் காதல், ரகசியமாகத் திருமணம், உடனே ஒரு பிரிவு. அடுத்ததாக விருப்பம் இல்லாமல் ஜோதிகாவுடன் திருமணம், எல்லையில்லா காதல், கொண்டாட்டம். இப்படி இருவேறுபட்ட சூழல்களை எதிர்கொள்ளும் சூர்யாவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது.

    கெளதமின் மாயாஜாலம்

    கெளதமின் மாயாஜாலம்

    சூர்யா - கெளதம் வாசுதேவ் கூட்டணி ஏற்கனவே 'காக்க காக்க' படத்தின் மூலம் மெஹா ஹிட் கொடுத்திருந்தனர். ஆனால், அதையும் கடந்து சூர்யாவின் நடிப்பிற்கு கிளாசிக் ட்ரீட்டாக அமைந்தது 'வாரணம் ஆயிரம்.' தந்தை-மகன் உறவைப் பின்னணியாக வைத்துகொண்டு, படம் முழுக்க காதல் ரசம் சொட்ட வைத்தது இந்தப் படம். சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா என மூன்று ஃப்ளேவர்களில் காதலை சுவைத்துக் காட்டினார் சூர்யா. நந்தா, மெளனம் பேசியதே, சில்லுன்னு ஒரு காதல், வாரணம் ஆயிரம் என இந்த 4 படங்களும் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரைட் என்றால் அது மிகையாகாது.

    English summary
    Suriya's Top 4 Classic Movies: Must Watch If You Haven't Seen It Yet…
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X