உருக்கமான ட்வீட் போட்ட சூர்யா: ஃபீலிங்கில் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: என்.ஜி.கே. படம் ரிலீஸாகியுள்ள இன்று சூர்யா தனது ரசிகர்களுக்காக உருக்கமான ட்வீட் போட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்.ஜி.கே. படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை காட்சியை பார்க்க சூர்யா ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.
முன்னதாக சூர்யாவுக்கு ரூ. 6 லட்சம் செலவில் திருத்தணியில் 215 அடியில் பிரமாண்ட கட்அவுட் வைத்தனர். ஆனால் நேற்று அந்த கட்அவுட்டை முனிசிபாலிட்டி அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.
சூர்யா
சூர்யா என்.ஜி.கே. ரிலீஸ் நாளான இன்று உருக்கமான ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி
சூர்யாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களுக்கு குஷியாகிவிட்டது. எது நடந்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் தலைவா, இது அடிச்சு தூக்கும் நேரம். கவலைப்படாதீர்கள், இது தானா சேர்ந்த கூட்டம் என்றும் அப்படியே தான் இருக்கும். என்.ஜி.கே. நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று தெரிவித்துள்ளனர்.
விமர்சனம்
என்.ஜி.கே. படத்தில் சூர்யாவின் நடிப்பு வேற லெவல், படத்தை அவர் தன் தோளில் தாங்குகிறார் என்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையே. ஒரு முறை பார்க்கலாம் அவ்வளவு தான் என்று மற்றவர்கள் தெரிவித்துள்ளனர். கட்அவுட் மட்டும் உயரமா இருந்தா பத்தாது, படம் தரமா இருக்கணும், நல்லா இருந்தா மக்களே உயரத்தில் கொண்டு சென்று வைப்பர் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

பிரச்சனை
என்.ஜி.கே. படம் பல காலமாக எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது சூர்யாவுக்கும், செல்வராகவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பட ரிலீஸுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க 19 ஆண்டுகளாக காத்திருந்ததாக தெரிவித்தார். மேலும் செல்வராகவனுக்கு இணை செல்வராகவன் தான் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











