இது அப்டேட் வாரம்.. சூர்யாவின் வாடிவாசல் டைட்டில் லுக் எப்போ ரிலீஸ் தெரியுமா? சம்பவம் லோடிங்!

சென்னை: சினிமா ரசிகர்களை அடுத்தடுத்து புதிய படங்களின் அப்டேட்களாக குவிந்து குஷிப்படுத்தி வருகிறது.

கமல்ஹாசனின் விக்ரம் ஃபர்ஸ்ட் லுக், இரண்டு வருடங்களாக காத்திருந்த தல அஜித்தின் வலிமை பட அப்டேட் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிடைத்து வரும் நிலையில், சூர்யாவின் ரசிகர்களுக்கான அப்டேட் நாளை வெளியாகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகிறது.

வெற்றிமாறன் படம்

வெற்றிமாறன் படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படங்கள் தான். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என அனைத்துமே தரமான சம்பவங்கள் தான். அந்த வரிசையில் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் திரைப்படமும் இடம்பெற காத்திருக்கிறது.

புதிய கூட்டணி

புதிய கூட்டணி

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போவில் வெளியான படங்கள் எல்லாமே பெரிய வெற்றியை பெற்றுள்ளன. விசாரணை படத்தில் அந்த காம்பினேஷன் மாறியது. தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி உள்ளார் வெற்றிமாறன். அடுத்ததாக சூர்யாவுடன் வாடிவாசல் படத்துக்காக இணையவுள்ளார்.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜின் படத்தை முடிக்கவுள்ள நிலையில், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் இணைந்து நடிக்க ரெடியாகி விட்டார். இந்நிலையில், நாளை மாலை 5.30 மணிக்கு சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் #VaadiVaasal ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தின் டைட்டில் லுக் மிகவும் சிறப்பாக இருந்த நிலையில், அதனை பீட் பண்ணும் அளவுக்கு வாடிவாசல் டைட்டில் லுக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து அப்டேட்

தொடர்ந்து அப்டேட்

தளபதி விஜய்யின் பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக், தீபாவளிக்கு சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த, உலகநாயகனின் விக்ரம் பட ஃபர்ஸ்ட் லுக், தல அஜித்தின் வலிமை என தொடர்ந்து அப்டேட் வெளியாகி வரும் நிலையில், அடுத்ததாக நடிப்பின் நாயகன் சூர்யாவின் வாடிவாசல் பட அப்டேட்டும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X