தமிழர்களின் வீரமும் வரலாறும் கொண்டது ஜல்லிக்கட்டு.. தெறிக்குது சூர்யாவின் வாடிவாசல் டைட்டில் லுக்!
சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சூர்யாவின் வாடி வாசல் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
பழங்கால தமிழர்களின் நாணயத்திலேயே கண்டு எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையின் சின்னத்துடன் டைட்டில் லுக் வெளியாகி இருப்பது புல்லரிக்க வைக்கிறது.

வாடிவாசல் டைட்டில் லுக்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தற்போது இந்த அட்டகாசமான வரலாற்று பெருமை மிக்க டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார்.

வீரத்தின் அடையாளம்
தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட வாடிவாசல் நாவலை தழுவியே இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். வாடிவாசலில் இருந்து தான் ஜல்லிக்கட்டு காளைகள் புறப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

ஜல்லிக்கட்டு காளை
ஜல்லிக்கட்டு காளை பொறிக்கப்பட்ட நாணயத்தை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுத்தனர். அந்த நாணயத்தை வைத்தே டைட்டில் லுக்கை உருவாக்கி அசத்தி உள்ளனர். சூர்யாவின் வாடிவாசல் டைட்டில் லுக்கை சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

படப்பிடிப்பு எப்போ
சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள விடுதலை படத்தை முடித்த வெற்றிமாறனும், பாண்டிராஜ் படத்தை விரைவில் முடிக்கவுள்ள சூர்யாவும் இணைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











