காளையிடம் இருந்து தப்பிய சூர்யா... பதறிய வெற்றிமாறன்... வாடிவாசல் ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்...

சென்னை: சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ க்ளிம்பிஸ் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், வாடிவாசல் ஷூட்டிங் பற்றியும் க்ளிம்ப்ஸ் வீடியோ படப்பிடிப்பில் நடந்த விபரீதம் குறித்தும் டாணாக்காரன் இயக்குநர் தமிழ் பேசியுள்ளார்.

 சூர்யாவின் வாடிவாசல்

சூர்யாவின் வாடிவாசல்

மலையாளத்தில் குஞ்சாக போபன் நடித்துள்ள பகலும் பாதிராவும் திரைப்படம் மார்ச் 3ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் வில்லனாக நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் போலீஸாக நடித்து மிரட்டியிருந்த தமிழ், தற்போது மலையாளத்திலும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். வெற்றிமாறனிடம் அசோசியேட் டைரக்டராக இருந்த இவர், வடிவாசல் படத்திலும் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாடிவாசல் படத்தின் மேக்கிங் வீடியோ க்ளிம்பிஸில் தமிழும் நடித்திருந்தார்.

 காளையிடம் இருந்து தப்பிய சூர்யா

காளையிடம் இருந்து தப்பிய சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் வாடிவாசல் படத்தில், சூர்யாவுடன் மேலும் பலர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், பகலும் பாதிராவும் என்ற மலையாள படத்தில் நடித்துள்ள தமிழ், அதன் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வாடிவாசல் மேக்கிங் வீடியோ ஷூட்டிங்கில் நடந்த விபரீதம் குறித்து உண்மையை கூறியுள்ளார்.

 மாடு முட்டி தூக்கி வீசியது

மாடு முட்டி தூக்கி வீசியது

வாடிவாசல் மேக்கிங் வீடியோ ஷூட்டிங்கின் போது ஜல்லிக்கட்டு காளை தனது கையில் பாய்ந்துவிட்டது. அதில் தான் ஒரு பத்து அடி தூரம் தூக்கி வீசப்பட்டேன். அப்போது அந்த காளை சூர்யாவைவும் முட்டிவிட பாய்ந்தது. வெற்றிமாறன் சார் தான் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். மேலும், காளையுடன் இன்னும் கொஞ்சம் பழகிய பின்னர் ஷூட்டிங் போகலாம் என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

 ஏப்ரல், மே மாதம் வாடிவாசல் ஷூட்

ஏப்ரல், மே மாதம் வாடிவாசல் ஷூட்

அதேபோல் வாடிவாசல் படத்தில் நடிக்கும் காளைகள் சூர்யாவுக்கு சொந்தமானது என்றும், அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். மேலும், வாடிவாசல் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார். டாணாக்கரன் இயக்குநர் தமிழ், வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது சூர்யா ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

 இறுதிக்கட்டத்தில் சூர்யா 42

இறுதிக்கட்டத்தில் சூர்யா 42

சூர்யா தற்போது அவரது 42வது படமான 'சூர்யா 42'-ல் பிஸியாக நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X