என்னது வாடிவாசல் இப்படிப்பட்ட படமா...அசத்தல் அப்டேட் தந்த தயாரிப்பாளர்

சென்னை : தமிழ் சினிமாவின் வெற்றிப்பட தயாரிப்பாளராக இருந்து வருபவர் கலைப்புலி எஸ்.தாணு. கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து தாக்குப்பிடித்து நிற்கும் ஒரு சில தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ளன.

தனுஷ் நடிப்பில் இவர் கடைசியாக தயாரித்துள்ள கர்ணன் படம் சமீபத்தில் ரிலீசாகி பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை தயாரித்து வருகிறார். அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு டைரக்டர் வெற்றிமாறனுடன் இணைந்து, தாணு பணியாற்றும் 2 வது படம் இதுவாகும்.

கொரோனாவால் திணறும் வாடிவாசல்

கொரோனாவால் திணறும் வாடிவாசல்

வாடிவாசல் படத்தை பிரம்மாண்ட படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அது கட்டுக்குள் வரும் வரை காத்திருக்கிறது படக்குழு. கொரோனா பரவல் அடங்குவதற்குள்ள மற்ற பணிகளை செய்யலாமா என படக்குழு ஆலோசித்து வருகிறது. ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் வாடிவாசல் படமும் ஒன்று.

10 மடங்கு கொடுத்த அசுரன்

10 மடங்கு கொடுத்த அசுரன்

இந்நிலையில் வாடிவாசல் படம் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலைப்புலி தாணு பேசி இருந்தார். அதில், வாடிவாசல் படம் பற்றி வெற்றிமாறன் தான் பேச வேண்டும். என் திரையுலக வாழ்க்கையில் ஒவ்வொரு படமும் எனக்கு மைல்கல் தான். அசுரன் எனக்கு முக்கியமான படம். பாரதிராஜா, கிழக்கு சீமையிலே படத்தில் தந்ததை விட 10 மடங்கு அதிகம் கொடுத்துள்ளது.

அசுரனை மிஞ்சும் வாடிவாசல்

அசுரனை மிஞ்சும் வாடிவாசல்

ஆனால் அசுரன் படத்தை விட 10 மடங்கு அதிகமாக வாடிவாசல் தரும். வாடிவாசல் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. படம் ரிலீசாகும் போது ஒட்டுமொத்த உலகையும் நிச்சயம் இந்த படம் உலுக்கும். வெற்றிமாறனின் சினிமா இலக்கணம், கலை நயத்திற்கு அளவே வைக்க முடியாது. வாடிவாசல், உண்மையான காவியமாக இருக்கும் என்றார்.

ஹீரோயினை முடிவு செய்யாத படக்குழு

ஹீரோயினை முடிவு செய்யாத படக்குழு

வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆனால் இந்த படத்தின் ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைள் பற்றிய படக்குழு இதுவரை முடிவு செய்யவில்லை. வாடிவாசல், எழுத்தாளர் சி.எஸ்.செல்லப்பா எழுதி தமிழ் நாவலை ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். வாடிவாசல் என்ற நாவலின் பெயரையே படத்திற்கும் வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X