வெற்றிமாறன் இயக்கத்தில்.. சூர்யாவின் வாடிவாசல் லுக் இப்படித்தான் இருக்கும்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

சென்னை: நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Suriya dual role in vetrimaran Vadivaasal • Aruva, Hari

சூரரைப் போற்று படக்குழு அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோவை பிறந்தநாள் பரிசாக வெளியிட்டது.

இந்நிலையில், தற்போது, வாடிவாசல் படத்தில் சூர்யாவின் லுக் எப்படி இருக்கும் என்ற மாஸ் போஸ்டர் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில்

வெற்றிமாறன் இயக்கத்தில்

நடிகர் தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என 4 மெகா பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து செய்யப் போகும் தரமான சம்பவம் தான் வாடிவாசல். அருவா படத்திற்கு முன்பாக இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்ற அறிவிப்புகள் வைரலாகி வருகின்றன.

ஒவ்வொரு ஸ்பெஷல்

ஒவ்வொரு ஸ்பெஷல்

இளைஞர்களின் முதல் கனவான பைக்கை மையமாக வைத்து பொல்லாதவன் படத்தையும், சேவல் சண்டையை மையமாக வைத்து ஆடுகளம் படத்தையும் இயக்கி வந்த வெற்றிமாறன், நாவல்களை படமாக்குவதில் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறார். விசாரணை, அசுரன் படங்களுக்கு பிறகு வாடிவாசல் எனும் நாவலை மையமாக வைத்து அதே தலைப்பில் இந்த படத்தை இயக்கவுள்ளார். ஆனால், இதில், ஜல்லிக்கட்டு பிரச்சனையும் மையம் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்தநாள்

சிறந்தநாள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் விரைவில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வாடிவாசல் கேரக்டர் லுக்கை வெளியிட்ட தாணு, சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கேரக்டர் டிசைன்

கேரக்டர் டிசைன்

சிகப்பு மற்றும் கருப்பு நிற உள் பனியனை அணிந்துக் கொண்டு, கழுத்தில் சிங்கப்பல் டாலரை அணிந்து கொண்டு, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில், உடம்பு முழுக்க நரம்பு புடைத்தபடி நடிகர் சூர்யா இருக்கும் வாடிவாசல் கேரக்டர் டிசைன் போஸ்டரை தற்போது ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்காகவே இந்த போஸ்டர் ரசிகர்களின் கொண்டாட்டத்தை மேலும், அதிகரித்துள்ளது.

முன்னதாக

முன்னதாக

நீண்ட தாடியுடன் சூர்யா இருக்கும் வெறித்தனமான ஃபேன் மேட் வாடிவாசல் போஸ்டர் முன்னதாக வெளியாகி வைரலான நிலையில், அந்த போட்டோவிற்கு சற்றும் குறையாத மாஸுடன் தாடி இல்லாமல் ஃபுல் ஷேவிங்கில் சூர்யா சூப்பர் ஹாட்டாக இருக்கிறார் என ரசிகர்கள், இரண்டு போஸ்டர்களையும் கம்பேர் பண்ணி கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X