For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யம்மாடியோவ்...வாடிவாசல் க்ளிப்சே இப்படி மிரட்டுதுன்னா...அப்போ டிரைலர், படமெல்லாம்?

  |

  சென்னை : சென்னை : நடிகர் சூர்யா இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சூர்யா தொடர்பான ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

  Recommended Video

  Soorarai Pottru National Award | ஜெயிச்சிட்டோம் மாறா | வென்று காட்டிய சூரரைப் போற்று *India

  கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக எதற்கும் துணிந்தவன் படத்தின் க்ளிப்ம்சை, டைட்டிலுடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. ஆனால் இந்த முறை அப்படியில்லை. சூர்யா ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடிப்பதால் எந்த படத்திற்கு அப்டேட் கேட்பது, எதை விடுவது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

  டைரக்டர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 41 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில், சூர்யாவின் பிறந்தநாளன்று தான் வெளியாகும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், சூர்யா பிறந்தநாளுக்கு முன் டைரக்டர் பாலாவின் பிறந்தநாள் வந்ததால் அன்றைக்கே டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு விட்டார்கள்.

  கோயிலில் விளக்கேற்றி வழிபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...இதை யாராச்சும் கவனிச்சீங்களா? கோயிலில் விளக்கேற்றி வழிபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...இதை யாராச்சும் கவனிச்சீங்களா?

  ஆவலாக காத்திருந்த ரசிகர்கள்

  ஆவலாக காத்திருந்த ரசிகர்கள்

  இதனால் இன்று பிறந்தநாள் ட்ரீட்டாக வாடிவாசல், சூர்யா 62 படங்களின் அப்டேட் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் க்ளிம்ப்ஸ் இன்று மாலை 5.30 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த க்ளிம்ப்சில் சூர்யா ,ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சொல்லப்பட்டது.இதனால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

  இது டீசர் கிடையாது; க்ளிம்ப்ஸ்

  இது டீசர் கிடையாது; க்ளிம்ப்ஸ்

  அதே போல் சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக வாடிவாசல் படத்தின் க்ளிம்ப்சை படத்தின் தயாரிப்பாளரா கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். இது டீசர் கிடையாது. வாடிவாசல் படத்திற்காக மாடுபிடி வீரர்களிடம் ஏறு தழுவுதல் நுணுக்களை கற்று, காளைகளை பிடிக்க சூர்யா பயிற்சி எடுத்த க்ளிம்பஸ் மட்டுமே. வாடிவாசல் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து என தெளிவாக குறிப்பிட்டு இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை உருவாக்கி உள்ளனர்.

  என்னமா மிரட்டி இருக்காங்க

  என்னமா மிரட்டி இருக்காங்க

  அதில், வாடிவாசலில் திமிரு நெளிய, சீறி பாய காத்திருக்கும் காளை. அதை அடக்குவதற்காக வாடிவாசலில் காத்திருக்கும் மாடுபிடிவீரர்களுடன் முண்டியடித்தபடி நிற்கிறார் சூர்யா. காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி, சூர்யா எவ்வாறு காளைகளுடன் பயிற்சி எடுக்கிறார் என்பவை காட்டப்படுகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், முதல் ஷாட்டில் ஒரு காளை ஒருவரை முட்டி தள்ளுகிறது. அடுத்த ஷாட்டில் அதே காளை சூர்யாவை முட்டுவதற்காக வருகிறது. ஆனால் சூர்யா அதை கையால் தடுக்கும் காட்சி காட்டப்படுகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை கொஞ்சம் பதற தான் வைக்கிறது.

  அச்சு அசலா அப்படியே இருக்காரு

  அச்சு அசலா அப்படியே இருக்காரு

  அந்த பார்வை, கையில் மண்ணை தேய்க்கும் ஸ்டைல் என அச்சு அசலாக சூர்யா மாடுபிடி வீரராகவே மாறி நிற்கும் இந்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. படத்தை எப்போ ரிலீஸ் செய்வீர்கள் என இப்போதே கேட்க துவங்கி விட்டனர். க்ளிம்ப்சே இப்படி இருக்குன்னா, டிரைலர், படமெல்லாம் எப்படி இருக்கும். இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய சாதனை படமாக அமையும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  ஷுட்டிங் எப்போ ஆரம்பிக்க போறீங்க

  டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் வாடிவாசல் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு அதிக அவகாசம் தேவைப்படுவதால் இதுவரை இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்படவில்லை. அதற்கு முன் சூர்யா, வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா படத்தையும், வெற்றிமாறன் விடுதலை படத்தையும் முடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

  English summary
  On the occassion of Suriya's birthday producer Kalipuli S.Dhanu released the glimpse of most awaiting film Vaadivasal. Fans enjoyed and exiciting on this video. They asked released date. But the movie was in pre production stage.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X