பாகுபலி வசூலை சூர்யாவின் வாடிவாசல் அசால்ட்டாக முறியடிக்கும்
சென்னை : அசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சி.ஆ.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட, பழிவாங்கும் கதை தான் வாடிவாசல்.

சூர்யா 40 க்கு பிறகு வாடிவாசல்
இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்தில் சூர்யா பிஸியாக இருந்து வருகிறார். இதை முடித்த பிறகே வாடிவாசல் படத்தை சூர்யா துவக்குவார் என கூறப்படுகிறது. இதனால் எல்ரெட் குமார் தயாரிக்கும் விடுதலை படத்தை இயக்க துவங்கினார் வெற்றிமாறன்.

செப்டம்பரில் வாடிவாசல் ஷுட்டிங்
தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிந்து விட்டதால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை செப்டம்பரில் துவக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். அதற்குள் சூர்யாவும் சூர்யா 40 படப்பிடிப்பை முடித்து விடுவார் என கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செப்டம்பர் மாதத்தில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, 2022 ல் படம் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வாடிவாசல் பற்றி தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசி உள்ளார்.
• வாடிவாசல் என் மனசுக்கு ஒரு பாகுபலி வசூலுக்கு கிட்ட வந்து நிக்கும்னு நான் நம்புறேன்..#VaadiVaasal Shoot To Begin From September 2021 Says Thanu 🔥Suriya_offl | theVcreations ! pic.twitter.com/EZpsIt9o4y
— Suriya Fans Club™ (SuriyaFansClub) July 3, 2021
பாகுபலியின் வசூலை எட்டும்
அதில் அவர், வாடிவாசல் படத்தின் வசூல் பாகுபலி படத்தின் வசூலை எட்டும் என என் மனதில் தோன்றுகிறது. நிலைமை சரியாக இருந்தால் பாகுபலி வசூலை அசால்ட்டாக வாடிவாசல் கடந்து விடும் என்றார். தாணுவின் இந்த பதில் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சமாச்சே
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வசூல் மற்றும் பிரம்மாண்டத்திற்கு உதாரணமாக சொல்லப்படுகின்றன. உலக அளவில் ரூ.1500 கோடியை வசூத்து பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த படம் இது தான்.


Click it and Unblock the Notifications











