வாயைப் பிளந்து பார்ப்பார்கள்.. கங்குவா படத்துக்கு ஓவர்ஹைப் ஏற்றிய சூர்யா.. அடுத்த வாரம் சம்பவம் தான்!

சென்னை: தமிழ் சினிமாவில் இதுவரை இப்படியொரு படத்தை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் இந்தியாவில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கங்குவா படத்தை வாயை பிளந்து பார்ப்பார்கள் என இன்று நடைபெற்ற கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளது அவரது ரசிகர்களை உச்சகட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

அயன், சிங்கம் என ஒரு காலத்தில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு வந்த சூர்யா சிறந்த நடிகராக சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் ஷைன் ஆனார். ஆனால், அந்த 2 படங்களும் தியேட்டர்களில் வெளியாகாத நிலையில், எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியாகி சொதப்பியது.

kanguva suriya disha patani

அந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் மார்க்கெட் மொத்தமாக சரிந்து விட்டது என்றும் கங்குவா பாக்ஸ் ஆபிஸில் எடுபடாது என ஹேட்டர்கள் கதறிக் கொண்டு இருக்கும் நிலையில், இருங்க பாய் மோடுக்கு மாறிவிட்டார் சூர்யா.

2000 கோடி வசூல்: 10 ஆயிரம் ஸ்க்ரீன்களில் கங்குவா திரைப்படத்தை வெளியிட ஞானவேல் ராஜா பக்கா பிளான் செய்திருக்கிறார். சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, கருணாஸ், நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூலை எட்டும் என தயாரிப்பாளர் முன்னதாக சொல்லியிருந்தார்.

kanguva suriya disha patani

வாயைப் பிளந்து பார்ப்பார்கள்: தமிழ் சினிமாவில் இப்படியொரு படத்தை எடுக்க முடியுமா? என்கிற வியப்பு இந்திய சினிமாவை சேர்ந்த அனைவருக்கும் வரும். கங்குவா படத்தை வாயைப் பிளந்து அனைவரும் பார்ப்பார்கள். அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி இரட்டை தீபாவளியாக இருக்கப் போகிறது என நடிகர் சூர்யா இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஓவர் ஹைப்: தனது கங்குவா படத்தை எந்தளவுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியுமோ அந்தளவுக்கு சூர்யா புரமோஷன் நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு சென்றிருக்கிறார். மும்பை, டெல்லி, கொச்சின், ஐதராபாத், பெங்களூர் மற்றும் சென்னை என அனைத்து நகரங்களுக்கும் சென்று கங்குவா படத்தை புரமோட் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்ட 3டி கங்குவா டிரெய்லர் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா இப்படி வெளிப்படையாக படத்தை ஓவர்ஹைப் செய்து பேசியிருப்பது அவருடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது என்றும் அடுத்த வாரம் கங்குவா திரைப்படம் அமரன் படத்தை விட மூன்று மடங்கு வசூல் வேட்டையில் மிரட்டும் என்றும் கூறுகின்றனர்.

kanguva suriya disha patani

திஷா பதானி வேறலெவல் ப்ரோமோஷன்: ஒரு பக்கம் சூர்யா ஓடோடி சென்று பல இடங்களில் கங்குவா படத்தை புரமோட் செய்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆட்டம் பாம்களை இறக்கி நடிகை திஷா பதானி இன்னொரு பக்கம் கவர்ச்சி ரூட்டில் கங்குவா படத்தை புரமோட் செய்து வருகிறார். பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த கல்கி 2898 ஏடி படம் இந்த ஆண்டு ஈட்டிய வசூலையே கங்குவா முறியடிக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X