காதலிக்க கத்துக்கொடுத்ததே இவர்தான்.. - நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூர்யா!
Recommended Video

சென்னை : கௌதம் கார்த்திக், கார்த்திக் நடித்திருக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி, சாந்தனு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய சூர்யா, "கார்த்திக் சார் படம் பார்த்துத்தான் லவ்னா இப்படித்தான் இருக்குமோ, லவ் இப்படித்தான் பண்ணணுமோ அப்படிங்குற மாதிரி ஐடியா கிடைச்சது. 'மௌனராகம்' படத்தில் கார்த்திக் சார் சொல்ற இந்த 'மிஸ்டர்.சந்திரமௌலி' பெயரை டைட்டிலா பார்க்கும்போது 86 நினைவுகள்லாம் வந்துடுச்சு.

என் தங்கச்சி பிருந்தாவுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்னு நாங்க நினைச்சு பார்க்கவே இல்ல. எங்களுக்கும் இப்படித்தான் நடந்திருக்கு. ஒவ்வொரு வாட்டியும், ஃபேமிலியோட பின்னணியில் இல்லாம தான் நாங்க எல்லோரும் சினிமாவுக்குள்ள வந்திருக்கோம். வசந்த் சார் வந்து கேட்டதால மட்டுமே நான் இப்போ நடிகரா இருக்கேன்.
ஞானவேல்ராஜா வந்து கார்த்தி நடிச்சே ஆகணும்னு கேட்டதால் தான் கார்த்தி நடிக்க வந்தாப்ள. பாடகியாகணும்ங்கிறது பிருந்தாவோட சின்ன வயசு ஆசை. இவ்ளோ பெரிய ஸ்டேஜ்ல பிருந்தாவுக்காக நேரம் ஒதுக்கி முக்கியமான அறிமுகம் கொடுத்த தனஞ்செயன், திரு, சாம் சி.எஸ் எல்லோருக்கும் நன்றி.
கார்த்திக் சார் செட்ல இருந்தா யாருக்கும் எனர்ஜி டவுனே ஆகாது. அவர் உள்ள வரும்போதே டார்லிங் குட் மார்னிங்னு சொல்லிட்டு வருவார். ஒருத்தர் விடாம எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்வார். அவர் கூட வொர்க் பண்ணினது ஒரு மேஜிக். இந்தப் படம் நல்ல வெற்றியடையும்" எனப் பேசினார் சூர்யா.


Click it and Unblock the Notifications











