Actor Suriya: விஜய்க்கு சொன்ன கதையில் இணையும் சூர்யா?.. கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் லோடிங்!

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணையவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. சூரரை போற்று படத்தை தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இணைந்தது படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. கங்குவா படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் மதுரையில் முதல்கட்ட சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் 'கூறப்பட்டது.

படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளதால், அதற்காக தன்னுடைய பிட்னசை அவர் மேக்கப் செய்யவுள்ளதாகவும் அதனால் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் கால தாமதம் ஆவதாகவும் அதனால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சூர்யா மற்றும் சுதா கொங்கரா அறிவித்திருந்தனர். இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போயுள்ளது. இதனிடையே, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய சூர்யா 44 படத்திற்காக சூர்யா தற்போது இணைந்துள்ளார்.

Suriya seems to act with karthik subbaraj direction in the story narrated to Vijay it seems

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அவரது படங்களின் கதைத்தேர்வு சிறப்பாக அமைந்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறி வருகின்றன. அந்த வகையில் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படம் சர்வதேச அளவில் 10மொழிளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படம 3டி தொழில்நுட்பத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புறநானூறு படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா இணையவுள்ளதாகவும் இந்தப் படத்தை அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்கள் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டநிலையில், படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் கூட்டாக அறிவித்தனர். இந்தப் படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி: இந்நிலையில் அடுத்தடுத்து பாலிவுட்டில் கர்ணா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படங்களிலும் சூர்யா விரைவில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது சூர்யா 44 படத்திற்காக இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் காதலை பிரதானமாக கொண்ட இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் கதையில் சூர்யா?: முன்னதாக நடிகர் விஜய்யின் தளபதி69 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான கதையையும் அவர் விஜய்யிடம் கூறியதாகவும கூறப்பட்ட நிலையில் தற்போது அந்தக் கதையில்தான் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சூர்யா -சமந்தா நடிப்பில் கேங்ஸ்டர் மற்றும் காதலை மையமாக வைத்து வெளியான அஞ்சான் படம் அவருக்குசிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அதே போன்ற கதைக்களத்தில் கார்த்திக் சுப்புராஜூடன் இணையவுள்ளார் சூர்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் சூர்யா -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X