என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டே இருக்கு.. அடுத்து சூர்யாவை இயக்கப்போவது இவரா?
Recommended Video
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, அடுத்ததாக இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நடிகர் சூர்யா சில முன்னணி இயக்குநர்களுடன் படம் பண்ணப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் ரவிக்குமாரும் இணைந்துள்ளார்.
சூரரைப் போற்று ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில், அடுத்ததாக எந்த இயக்குநர் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் மட்டும் தான், சூர்யாவின் அடுத்த பட இயக்குநர் குறித்து உறுதியாகும்.

சூரரைப் போற்று
செல்வராகவனின் என்.ஜி.கே படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், நடிகர் சூர்யாவின் ஃபிட்னஸ் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அயன் படத்தின் ஃபிட்னஸ் போல் மாறியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர். டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூரரைப் போற்று, ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தோல்வி
காக்க காக்க படத்திற்கு பிறகு பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நடிகர் சூர்யா, தற்போது, தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வருகிறார். சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே., என மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய மூன்று படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரைப் போற்று படம் சூர்யாவுக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய லிஸ்ட்
சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் பண்ணுவார் என தகவல் வெளியானது. மேலும், பாலா, வெற்றிமாறன், கெளதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், ஹரி என சூர்யாவின் அடுத்தடுத்த இயக்குநர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது அந்த வரிசையில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரும் இணைந்துள்ளார்.

என்ன ஆச்சு
இன்று நேற்று நாளை படம் கம்மி பட்ஜெட்டில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட சையின்ஸ் ஃபிக்ஷன் படமாக வெற்றியை கொடுத்தது. ஆனால், அதற்கடுத்து சிவகார்த்தியேன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ரவிக்குமார் தொடங்கிய ஏலியன் படம், ஆர்.டி. ராஜா பிரச்சனையால் கிடப்பில் கிடக்கிறது.
ட்ரீம் வாரியர்
இந்நிலையில், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











