ஜன நாயகன் ரிலீஸில் சூர்யா பாடிய பாட்டை கண்டுக்காம விட்டுட்டீங்களே.. மமிதாவோடு செம்ம டான்ஸ் பாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது 'ஜன நாயகன்' படம்தான் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து வருகிறது. முதல் நாள் முதல் காட்சி, வசூல், கொண்டாட்டம் என சமூக வலைதளங்கள் முழுவதும் அந்த படம் பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பரபரப்புக்கு நடுவே நடிகர் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் புதிய அப்டேட் ஒன்று சத்தமே இல்லாமல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'கருப்பு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் 'தி வெட்டிங் சாங்' (The Wedding Song) பாடலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏ.ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த பாடலின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், அதை சூர்யாவே பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், மமிதா பைஜுவுடன் இணைந்து சூர்யா ஆடியிருக்கும் கலகலப்பான நடனமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

"Let's celebrate together" என்ற கேப்ஷனுடன் பாடலை வெளியிட்டுள்ள படக்குழு, திருமண விழா கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வெள்ளை வேஷ்டி, சட்டையில் சூர்யாவும், சிவப்பு நிற டிரெடிஷ்னல் உடையில் மமிதா பைஜுவும் ஆடியிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஒருபுறம் 'ஜன நாயகன்' கொண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், மறுபுறம் சூர்யாவின் இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சூர்யாவின் குரலில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. "சூர்யா பாடியிருப்பதே பாடலுக்கு கூடுதல் பலம்", "மமிதாவுடன் செம்ம கெமிஸ்ட்ரி" என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் போஸ்டர்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'தி வெட்டிங் சாங்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகும் இந்த படம், 'கருப்பு' படத்தைப் போலவே மற்றொரு வெற்றிப்படமாக மாறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஜன நாயகன் படம் வெளியான நாளில் இந்த பாடல் வெளியானதால் ரசிகர்கள் பலரும் இந்த பாடலைக் கண்டுகொள்ளவில்லை. இப்படி இருக்கையில் சூர்யா பாடிய பாடல் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், பாடலின் நடுவே வரும் வீடியோவில் சூர்யாவும் மமிதாவும் செம்ம ஸ்போர்ட்டிவாக டான்ஸ் செய்வது ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications