கருணாநிதியின் உடலுக்கு சிவக்குமார், சூர்யா அஞ்சலி
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.

பொது மக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியை கடைசியாக ஒரு முறை பார்க்க ராஜாஜி ஹாலில் பொது மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என்று ஏராளமானோர் வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். கருணாநிதி எழுதிய வசனங்களை பேசி நடித்த வாய்ப்பு பெற்ற நடிகர் சிவக்குமார் தனது மகன் சூர்யாவுடன் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக கருணாநிதியை காவேரி மருத்துவமனையிலும் பார்த்து நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











