மருத்துவமனையில் கருணாநிதியின் நலம் விசாரித்த சிவக்குமார், சூர்யா: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

கருணாநிதியின் நலம் விசாரித்த சிவக்குமார், சூர்யா: வைரல் வீடியோ

சென்னை: காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சிவக்குமார், சூர்யா ஆகியோர் நேரில் பார்த்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நலம் தற்போது தேறியுள்ளது.

Suriya, Sivakumar visits Kauvery hospital

அவர் நலமாக உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை பார்த்து வருகிறார்கள்.

நடிகர் சூர்யா தனது தந்தை சிவக்குமாருடன் இன்று மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக நடிகர் விஷால் ட்விட்டரில் கருணாநிதி பற்றி கூறியிருப்பதாவது,

போராளி என்ற வார்த்தை இன்று முதல் கலைஞரையே குறிக்கும். நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது முதல் இன்று வரை அவர் கூறும் வார்த்தை 'Never give up'. சொல்வதோடு மட்டும் அல்லாமல் வாழ்ந்தும் காட்டி வருகிறார். என்ன ஒரு இன்ஸ்பிரேஷன். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் வித்தியாசமான கோணத்தை அளித்துள்ளீர்கள். அன்புத் தலைவா, உங்களை தலை வணங்குகிறேன் என்று விஷால் ட்வீட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X