Suriya 44: சூர்யா 44 சூட்டிங் ஓவர்.. கங்குவா ரிலீஸ் ஆகலனு கவலப்பட்ட ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக அது அமைந்தது. இவரது நடிப்பில் படம் ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் சூர்யா ரசிகர்கள் எக்கச்சக்க ஏக்கத்தில் இருக்கின்றனர்.
இவரது கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் என தள்ளிப்போனது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் சூர்யாவின் 44வது படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள கங்குவா படம் சூர்யாவின் 42வது படமாகும்.

இந்த படத்தில் கல்கி 2898 ஏ.டி படத்தில் நடித்த நடிகை தீஷா பதானி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் கிலிம்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ்: அதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் 'சூர்யா என பெயரிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யாவின் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் கதையை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு முன்னரே கார்த்திக் சுப்புராஜ் தயாராக வைத்திருந்தார் எனக் கூறப்படுகின்றது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அவர்களுடன் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளனர். ஏற்கனவே சூர்யா தனது 43வது படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது.

பாராட்டு: புறநானூறு படம் கைவிடப்பட்டதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. இப்படம் தொடங்கப்படுவதற்கு முன்னரே சூர்யா தனது 44வது படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கியது. சூர்யா 44 ஒரு அதிரடியான ஆக்ஷன் படம் என்பதால் ஆக்ஷன் காட்சிகளை ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ இயக்கியுள்ளார். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என படக்குழு நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி என்னவென்றால், சூர்யாவின் ஒத்துழைப்பைப் பார்த்து ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ பாராட்டியுள்ளாராம்.
சூர்யா: இந்நிலையில் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், " மிகவும் சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை சூர்யா 44 படப்பிடிப்பு கொடுத்தது. திறமையான நடிகர்கள் மற்றும் கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தின் மூலம் எனக்கொரு சகோதரன் கிடைத்துள்ளார். சூர்யா 44 படத்தினை வாழ்வில் மறக்கமுடியாததாக மாற்றிய கார்த்திக் சுப்புராஜ், படக்குழுவினர் என அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு நிறைவடைந்தது" என பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவுடன் சூர்யா கார்த்திக் சுப்புராஜை கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், படக்குழுவினரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











