9 வருஷம் கத்துக்கிட்டாரு.. சூர்யா மகன் தேவ் எப்படி பட்டவருன்னு ஓபனாக பேசிய கராத்தே மாஸ்டர்!

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன் தேவ் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிளாக் பெல்ட் வென்றார். அந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யா கலந்து கொண்டார். தனது மகன் பிளாக் பெல்ட் வாங்குவதற்கான போட்டியில் பங்கேற்ற போது ஆர்வத்துடன் அதனை தனது மொபைல் மூலம் வீடியோ எடுத்து மகிழ்ந்தார் சூர்யா.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு சூர்யாவின் மகன் தேவுக்கு பயிற்சி கொடுத்து வரும் கராத்தே மாஸ்டர் பாலமுருகன் அளித்துள்ள பேட்டியில் நடிகர் சூர்யாவின் மகன் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

Suriya Son Dev is a very disciplined student told by Karate Master Balamurugan

நடிகர் சூர்யாவும் கராத்தே வகுப்புக்குள் வந்தால் பெரிய நடிகர் போல எந்த ஒரு பந்தாவும் காட்ட மாட்டார் என்றும் அவரைப் பார்த்து பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டதாகவும் கராத்தே மாஸ்டர் பாலமுருகன் கூறியுள்ளார்.

பிளாக் பெல்ட் வாங்கிய தேவ்: சிவகுமாரின் பேரனும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகனுமான தேவ் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பிளாக் பெல்ட் வாங்கிய வீடியோ சமீபத்தில் வெளியாகி டிரெண்டானது. அப்பா சூர்யா ரொம்பவே சந்தோஷப்பட்டு தனது மகன் பிளாக் பெல்ட் வாங்கும் போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தேவ் எங்கே இருக்கிறார்?: கடந்த 9 ஆண்டுகளாக தன்னிடம் தேவ் கராத்தே பயிற்சியை கற்று வருவதாக அவரது மாஸ்டர் பாலமுருகன் தனது பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக மும்பையில் புதிதாக வீடு வாங்கி கடந்த ஆண்டு செட்டில் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தேவ் தொடர்ந்து தனது தாத்தா வீட்டிலேயே இருந்து கராத்தே கற்றூ வருகிறாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Suriya Son Dev is a very disciplined student told by Karate Master Balamurugan

ரொம்ப சின்சியர்: தனக்கு ஒரு விஷயம் வரவில்லை என்றால், அதை எப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வமாக இருந்து சூர்யாவின் மகன் தேவ் கற்றுக் கொள்வார் என அவரது கராத்தே மாஸ்டர் கூறியுள்ளார். மேலும், அதிகாலை 4.15க்கு கராத்தே வகுப்பு என்றால் 4.05க்கே ஷார்ப்பாக தேவ் வந்து விடுவார். அந்த அளவுக்கு அவர் இந்த வயதிலேயே இப்படி சின்சியராக இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் என கராத்தே மாஸ்டர் கூறியுள்ளார்.

பந்தா பண்ணா மாட்டார்: 9 வருடங்கள் தேவ் தன்னிடம் கராத்தே கற்றுள்ள நிலையில், அதிகபட்சமாக நடிகர் சூர்யா இதுவரை 8 முறை மட்டும் வகுப்புக்கு மகனை பார்க்க வந்திருப்பார். ஆனால், தன்னிடம் எதுவுமே சொல்ல மாட்டார். உள்ளே வந்து விட்டார் அவர் ஒரு பெரிய நடிகர் போல பிஹேவ் பண்ணவே மாட்டார். அவரை பார்த்து நான் நிறைய விஷயங்களையும் தன்னடக்கத்தையும் கற்றுக் கொண்டேன் என சூர்யா குறித்தும் சூர்யா மகன் குறித்தும் கராத்தே மாஸ்டர் பேசியுள்ளார். நடிகர் சிவகுமார் அந்த காலத்திலேயே யோகா எல்லாம் செய்து தனது குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்த்த நிலையில், பேரனும் அதே போல இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X