Mounam Pesiyadhe: மூன்று கதாநாயகிகள்.. யாரையும் கட்டிப்பிடிக்கல.. 24 வருஷத்துக்கு பிறகு ஓபனாக சொன்ன சூர்யா
சென்னை: இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வெளியான முதல் படம் மௌனம் பேசியதே. இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, லைலா, நேகா என பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வெளியான 2002ஆம் ஆண்டே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், மௌனம் பேசியதே படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டு, வரும் 13ஆம் தேதி அதாவது காதலர் தினத்திற்கு முந்தைய நாளில் படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். இந்நிலையில் படத்தின் நாயகன் சூர்யா இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் படம் குறித்து தெரிவித்ததும் படக்குழு குறித்து தெரிவித்ததும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில், " ஒழுங்கா தானடா இருந்தீங்க.. திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த லவ்வு? காதல் கண்ணுல இருந்து வரக்கூடாது, மனசுல இருந்து வரனும், தனி மரம் தோப்பு ஆகாது என பல டயலாக்குகளை நான் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ரீல்ஸ், ஷாட்ஸாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். 24 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன மௌனம் பேசியதே படம் இப்போதும் பலரும் விருப்பமான படமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இயக்குநர் அமீரின் முதல் படம். எனது படங்களில் சிறந்த படங்களில் ஒன்று. த்ரிஷா, லைலா, நேகா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். ஆனால் ஒருவரை கூட கட்டிப் பிடிக்கவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் ஆல்பம் ஹிட் பாடல்கள். ஒரு தலைமுறையே இதைப் பார்த்திருக்க மாட்டார்கள். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார், கணேஷ் ரகு அப்ரஜித் பிலிம்ஸ்.
நீங்கள் தியேட்டரில் இந்த படத்தை எப்படி எல்லாம் வரவேற்கப் போகிறீர்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். உங்களுடன் இணைந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. பிப்ரவரி 13ஆம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் ஆகிறது. தியேட்டரில் பார்ப்பதற்கு திருப்திகரமான படமாக இருக்கும் என்று உறுதியாக கூறுகிறேன். சிக்கிரமே தியேட்டரில் பார்க்கலாம்" என்று பேசி உள்ளார். இவரது இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் பலரும் லைக்குகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











