Suriya: மனக்கசப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியில் பாலாவைப் போட்டுக் கொடுத்த சூர்யா!
சென்னை: இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர். தமிழ் சினிமாவுக்கு, தனது அசாத்திய இயக்கத்தின் மூலம், பல நல்ல படைப்புகளைக் கொடுத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் அடையாளமாக இன்றும் மிளிர்கின்றார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே கொஞ்சமும் எதார்த்தத்தைவிட்டு விலகாத, படங்கள். தமிழ் சினிமாவில் பாலா இயக்குநராக காலடி எடுத்துவைத்து, 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, விழா நடத்தப்பட்டது. அதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பாலா குறித்து பேசினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பாலா இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் வணங்கான். அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலா 25 ஆகியவற்றை ஒருசேர நடத்த திட்டமிட்டு அதனை சிறப்பாகவும் நடத்திக் காட்டியுள்ளார், சுரேஷ் காமாட்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, பாலா குறித்தும் பாலாவுடன் தான் நடித்த படங்கள், அப்போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும், பேசினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

பாலா இயக்கத்தில் சூர்யா மொத்தம் இரண்டு படங்களில் நடித்தார். ஒன்று, நந்தா, மற்றொன்று, பிதாமகன். இந்த இரண்டு படங்களிலும் சூர்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. நந்தா படம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட படமாக மாறியது. பாலா 25 விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசும்போது, நெய்காரப்பட்டியில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசிய பாலா சார், அடுத்து உன்னை வைத்து ஒரு படம் பண்ணப்போறேன்னுன் சொன்னாரு. அந்த போன் நான் பேசி முடித்த பின்னர் என்னோட வாழ்க்கையில எல்லாம் மாறிடுச்சு.

சூர்யா: சேது படம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இப்படியொரு நடிகர் நடிக்க முடியுமா? இப்படி ஒரு இயக்குநர் இயக்க முடியுமா? என கிட்டத்தட்ட 100 நாட்கள் சேது படத்தோட தாக்கம் எனக்குள்ள இருந்துட்டு இருந்துச்சு. என்னை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போகின்றேன் என பாலா சார் சொன்னபோது எல்லாம் மாறிடுச்சு. பிதாமகன் படத்தின் படப்பிடிப்பு நாட்களில் பாலா சார்கிட்ட இருந்து பல விஷயங்களை நான் தினமும் கற்றுக்கொள்வேன்.

தம்: பாலா சார் எனக்கு போன் பண்ணலனா, இன்னைக்கு எனக்கு இந்த வாழ்க்கை கிடையாது. நந்தா படம் பார்த்துட்டு, கௌதம் மேனன் சார் காக்க காக்க படம் பண்ணக் கூப்பிட்டார். காக்க காக்க படம் பார்த்துட்டு, முருகதாஸ் சார் கஜினி படம் பண்ணக் கூப்பிட்டார். இதுக்கு எல்லாம் காரணம் பாலா அண்ணன் தான். எனக்கு முதன் முதலில் தம் அடிக்க கத்துக் கொடுத்தது பாலா அண்ணன் தான். நந்தா படத்துல ஒரு காட்சியில தம் அடிக்கனும். எனக்கு தம் அடிக்கத் தெரியாது. அப்போ பாலா அண்ணா தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். 300 முறை தம் அடுச்ச பின்னர்தான், தம் அடிக்கவே கத்துக்கிட்டேன். அன்னைக்கு கத்துக்கிட்டது, ரோலக்ஸ் கதாபாத்திரம் வரைக்கும் உதவுது" என பேசினார்.

மனக்கசப்பு: சூர்யா பேசும்போது மேடையில் இருந்த பாலா, தம்பி முன்னாடி நான் தம் அடிக்க மாட்டேன். அவன் நடிக்கறப்ப பெரிய மானிட்டர் வெச்சு தம் அடிப்பேன். ஆனாலும் அவன் கண்டுபுடுச்சு எத்தனை தம் அடுச்சேன்னு சரியா சொல்லிடுவான். என்னை அவ்வளவு அக்கறையா பாத்துக்குவான்" என பேசினார். வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடிக்க, ஒப்பந்தம் ஆகி, படத்தின் படப்பிடிப்பு சில காலம் சென்ற பின்னர், படத்தில் இருந்து விலகினார் சூர்யா. இதனால் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனாலும் பாலா 25 நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டு, மனக்கசப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதேநேரத்தில் தனக்கு தம் அடிக்க கற்றுக் கொடுத்தது பாலா தான் எனக் கூறி, பாலாவை போட்டுக் கொடுத்துட்டாரே சூர்யா, என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











