Kanguva: தள்ளிப்போகும் கங்குவா.. ரிலீஸ் தேதி குறித்து சூர்யா எமோஷ்னல் பேச்சு.. ரசிகர்கள் ஷாக்!
கோவை: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்யழகன் (Meiyazhagan Audio Launch). இந்தப் படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 27வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். மேலும் படத்தில் இரண்டு பாடல்களை உலக நாயகன் கமல் ஹாசன் பாடியுள்ளார். இந்நிலையில் கங்குவா இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய, சூர்யா, கங்குவா படத்தின் ரிலீஸ் குறித்து பேசினார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், மெய்யழகன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்ட, இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் உள்ள கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது.

படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அதில், யாரோ இவன் யாரோ மற்றும் நான் போகின்றேன் எனத் துவங்கும் பாடல்களை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார். படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற படங்களுக்கு ஏற்படுத்தும் பில்டப்களை இந்தப் படத்திற்கு கார்த்தி மற்றும் 2டி எண்டர்டைமெண்ட் நிறுவனம் ஏற்படுத்தவில்லை. பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மெய்யழகன் படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகின்றது.
சூர்யா: இந்நிலையில் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும் கார்த்தியின் அண்ணனுமான சூர்யா கங்குவா படத்தின் ரிலீஸ் குறித்து பேசினார். சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக பொருட்ச்செலவில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கங்குவா ரிலீஸ் தேதி: இந்நிலையில் நடிகர் சூர்யா, மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், " கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. எனவே சூப்பர் ஸ்டார்க்கு மரியாதை செய்வதே சரியாக இருக்கும்.

ரசிகர்கள் அப்செட்: கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீங்கனு நம்புறேன். இந்த நிலையில், நீங்கள் (ரசிகர்கள்) என்னுடன் இருப்பீர்கள் என நினைக்கின்றேன்" என பேசினார். சூர்யாவின் இந்தப் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சூர்யாவின் பேச்சின் மூலம், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி என்பது தள்ளிப் போகின்றது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார்.



Click it and Unblock the Notifications











