வெற்றிமாறன் இயக்க இருந்த.. சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு என்னாச்சு? தயாரிப்பாளர் தாணு விளக்கம்!
சென்னை: வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதாக வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து, சூப்பர் ஹிட்டான படம் அசுரன். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.
மஞ்சு வாரியர், டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சூர்யாவின் வாடிவாசல்
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தை வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருந்தார்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைப்பாளராக ஒப்பந்தமானார்.

சூரி நடிக்கும் படம்
ஆனால், கொரோனா காரணமாக இந்த திட்டம் தள்ளிப் போனது. இந்நிலையில் வெற்றி மாறன், காமெடி நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு படத்தையும் அவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.
Recommended Video

விலகி விட்டதாக
இந்நிலையில், சூர்யா, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. வெற்றிமாறன், சூரி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதனால், வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதாகவும் சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின.
சொல்லியது சொல்லியபடி
ஆனால், இதை படக்குழு மறுத்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.' எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் வலம் வரும். வாகை சூடும்' என்று கூறியுள்ளார்.
பெயரை உபயோகித்து
முன்னதாக, அவர் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, தவறான தகவலை பரப்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர், 'https://twitter.com/thivcreations இந்த ட்விட்டர் அக்கவுன்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











