என்ன கனம்!: ஹன்சிகாவை தூக்க முடியாமல் தூக்கி நடித்த சூர்யா
சென்னை: சிங்கம் 2 படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில் ஹன்சிகாவை அலேக்காக தூக்கும் காட்சியில் சூர்யாவுக்கு மூச்சு வாங்கிவிட்டதாம்.
சிங்கம் 2 படத்தில் சூர்யா ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஹன்சிகா என்ற பெயரைக் கேட்டதுமே தமிழக ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவரது மாசற்ற தோலும், கொழுக் மொழுக் உருவமும் தான்.
இந்நிலையில் சிங்கம் 2 படத்தில் ஒரு காட்சியில் சூர்யா ஹன்சிகாவை அலேக்காக தூக்கும் காட்சி உள்ளது. இந்த காட்சியை படமாக்குவதற்குள் சூர்யா திண்டாடிப் போனாராம்.

ஆத்தாடி என்னா வெயிட்டு?
ஹன்சிகா உயர்திக்கேற்ற நல்ல வெயிட்டான பார்ட்டியாக உள்ளார். இதனால் சூர்யா அவரை அலேக்காக தூக்க ரொம்பவே சிரமப்பட்டாராம். ஹன்சிகாவை தூக்க முடியாமல் தூக்கி பல டேக்குகள் வாங்கினாராம். காட்சியை படமாக்குவதற்குள் அவருக்கு மூச்சு வாங்கிவிட்டதாம்.

சித்தார்த்தும் வெயிட் பார்த்தாருல
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த்தும் ஹன்சிகாவை தூக்கியுள்ளார். சிறிது சிரமப்பட்டிருப்பார் என்று தெரிகிறது.

எடையை குறைக்கும் ஹன்சிகா
ஹீரோக்கள் தன்னை தூக்க சிரமப்படக் கூடாது என்று நினைத்த ஹன்சிகா உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











