Suriya Salary: கங்குவா படத்துக்காக சூர்யா எடுத்த ரிஸ்க்... கோடிகளில் சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்!
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது.
ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த க்ளிம்ப்ஸ், படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.
கங்குவா க்ளிம்ப்ஸில் சூர்யாவின் லுக், கேரக்டர், நடிப்பு எல்லாமே வித்தியாசமாக இருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்துக்காக அதிக ரிஸ்க் எடுத்துள்ள சூர்யாவுக்கு பல கோடிகளை சம்பளமாக கொடுத்துள்ளாராம் தயாரிப்பாளர்.

கங்குவா படத்திற்காக சூர்யா சம்பளம் இத்தனை கோடியா..?:சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை 'சிறுத்தை' சிவா இயக்கி வருகிறார். முதன்முறையாக இணைந்துள்ள சூர்யா - சிவா கூட்டணி, கங்குவா படத்தை வேற லெவலில் ஹிட் கொடுக்க வேண்டும் என தீயாக வேலை செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படம் குறித்து பலவிதமான செய்திகள் வெளியானாலும், நேற்று ரிலீஸான க்ளிம்ப்ஸ் வீடியோ எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 மணிக்கு ரிலீஸான கங்குவா க்ளிம்ப்ஸ், 24 மணி நேரத்தில் 2.2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. சூர்யாவின் லுக், கேரக்டர், பாடி லேங்குவேஜ் என அனைத்தும் படு மிரட்டலாக இருந்தது. இந்தப் படத்தில் சூர்யா 3 கெட்டப்பில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் ஹை ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம்.
அதேபோல், லுக், கெட்டப் போன்றவற்றை மாற்றுவதற்காக சூர்யா பல மணி நேரம் மேக்கப் போட்டு நடித்து வருகிறாராம். தனது சினிமா கேரியரில் கங்குவா படத்திற்காக சூர்யா அதிக ரிஸ்க் எடுத்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இதுதவிர கங்குவா படத்தில் இன்னும் பல சர்ப்ரைஸ்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கங்குவா படத்திற்காக சூர்யாவுக்கு ரொம்பவே பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதுவரை படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப 30 முதல் 40 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்தார் சூர்யா. முதன்முறையாக கங்குவா படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இதுதான் சூர்யாவின் கேரியரில் அதிக சம்பளம் என சொல்லப்படுகிறது. அதேபோல், கங்குவா படத்தின் பட்ஜெட்டும் 300 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து வரும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. அதேபோல், கங்குவா படத்தை 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் நடிக்கும் கங்குவா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











