Suriya: கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து... காயத்துடன் ரசிகர்களுக்கு மெசேஜ் சொன்ன சூர்யா!
சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது.
அப்போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த தனது ரசிகர்களுக்கு சூர்யா நன்றியுடன் மெசேஜ் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை கூல் செய்த சூர்யா: சூர்யா தற்போது தனது 42வது படமான கங்குவாவில் பிஸியாக நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சூர்யா ஜோடியாக திஷா பதானியும், முக்கியமான பாத்திரங்களில் யோகி பாபு, நட்டி ஆகியோரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்தப் படம் 10 மொழிகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது 38 மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதேபோல், 3டி வெர்ஷன், ஐமேக்ஸ் வெஷன் என டெக்னிக்கலாகவும் மிரட்டலாக வெளியாகவுள்ளது கங்குவா. பீரியட் ஜானரில் ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாகும் கங்குவா, அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவா, இலங்கை, கொடைக்கானல் என பல இடங்களில் கங்குவா படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் சூர்யா நடிக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் ஹீரோ சூர்யாவின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து கங்குவா படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், படக்குழுவினர் சூர்யாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்படி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் சூர்யா, விரைவில் கங்குவா படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த கங்குவா திடீர் விபத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சூர்யாவுக்கு காயம் என அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் Get well soon Suriya என பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சூர்யா, "தனது நண்பர்கள, அன்பர்கள், அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. Get well soon Suriya என்ற உங்கள் அன்பில் இப்போது நலமாக உணர்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











