Suriya: பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சூர்யா... ராஜமெளலி, அமீர்கானின் ட்ரீம் ப்ராஜெக்ட்!!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சூர்யா 43, வாடிவாசல் படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்நிலையில், பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இது மஹாபாரதத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளதாம்.

 Suriya: Suriya spotted with Bollywood Director Rakeysh Omprakash for the Mahabharata

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சூர்யா: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம், ஹிஸ்டாரிக்கல் ஜானரில் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா. இன்னொரு பக்கம் பாலிவுட்டிலும் அதிரடியாக என்ட்ரியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூரரைப் போற்று படத்தை இந்தியில் தயாரித்து வரும் சூர்யா, மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தார். அவரது குழந்தைகளின் படிப்புக்காக தான் சூர்யா மும்பையில் செட்டில் ஆகவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பாலிவுட்டில் இருந்து சூர்யாவுக்கு ஏராளமான ஆஃபர்கள் வருவதால் தான், அவர் குடும்பத்துடன் மும்பை சென்றுள்ளதாக தற்போது சொல்லப்படுகிறது.

அதன்படி, சூர்யாவுக்கு முதல் பாலிவுட் ஆஃபர், இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷிடம் இருந்து வந்துள்ளதாம். இந்தியில் ரங் தே பஸந்தி, டெல்லி 6, பாக் மில்கா பாக், டூஃபான் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராகேஷ் ஓம்பிரகாஷ். அவரது ட்ரீம் ப்ராஜெக்ட்டை தற்போது தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது மஹாபாரதம் இதிகாசத்தை பின்னணியாக வைத்து படம் இயக்கவுள்ளாராம் ராகேஷ்.

இந்தப் படத்திற்கு 'கர்ணா' என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இரண்டு பாகங்களாக பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இதில், சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக மும்பை சென்றுள்ள சூர்யா, இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷை சந்தித்த போட்டோ வைரலாகி வருகிறது. மேலும், இந்தப் படம் குறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

டோலிவுட் இயக்குநர் ராஜமெளலியும் மஹாபாரதத்தை தழுவி படம் இயக்க வேண்டும் என்ற கனவில் உள்ளார். 10 பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானும் மஹாபாரதத்தை படமாக எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனிடையே இப்போது சூர்யா - ராகேஷ் ஓம்பிரகாஷ் கூட்டணியில் கர்ணா திரைப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X