Suriya: அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமாருடன் சூர்யா... பாலிவுட் ரசிகர்களுக்கும் கங்குவா ட்ரீட் ரெடி..?

மும்பை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோருடன் சூர்யா எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமாருடன் சூர்யா: சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகிறது. அதேபோல், சூர்யா இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சூர்யாவின் கேரியரில் கங்குவா தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 Suriya: Suriya with Bollywood Superstar Amitabh Bachchan and Akshay Kumar

கங்குவாவை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தின் டைட்டிலில் புறநானூறு என்ற ஒரு பகுதியை மட்டும் படக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா ஆகியோர் நடிப்பதை படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. சூர்யா 43 ஷூட்டிங் விரைவில் மதுரையில் தொடங்கவுள்ளது.

இதனிடையே சூரரைப் போற்று படத்தை இந்தியில் தயாரித்து வருகிறார் சூர்யா. அதில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனால் அடிக்கடி மும்பை பறக்கும் சூர்யா, அங்கேயே ஒரு பிரம்மாண்டமான பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். ஜோதிகாவும் அடிக்கடி மும்பையில் தான் தங்கியிருப்பதாகவும், தற்போது அவர் மாதவனுடன் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனால் சூர்யாவும் பாலிவுட்டில் விரைவில் என்ட்ரி கொடுத்துவிடுவார் என சொல்லப்பட்டது. ஏற்கனவே பாலிவுட்டில் ராமாயணத்தை பின்னணியாக வைத்து உருவாகும் பிரம்மாண்டமானதொரு படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்நிலையில் இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவும் வைரலாகி வருகிறது.

இது சூரரைப் போற்று இந்தி வெர்ஷன் ப்ரொமோஷனுக்காக நடந்த சந்திப்பா அல்லது கங்குவா படத்திற்கான பாலிவுட் ப்ரொமோஷன் மீட்டிங்கா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X