Suriya: கங்குவா வைப்... சூர்யாவின் ஹாலிவுட் ஹீரோ லுக்... சம்பவம் பெருசா இருக்கும் போல!
சென்னை: சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், இன்னொரு பெரிய சம்பவமாக சூர்யாவின் மெர்சலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெறித்தனமாக வெளியான சூர்யா போஸ்டர்: சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றார் சூர்யா. அதேவேகத்தில் தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42வது படமான கங்குவா, ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூர்யா ஜோடியாக திஷா பதானி, முக்கியமான கேரக்டரில் நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
கங்குவா 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கங்குவா படத்தை 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமிருக்கும் என சொல்லப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில், சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு, லுக், கிராபிக்ஸ், பிஜிஎம் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சூர்யாவின் முதல் பீரியட் ஜானர் படமாக கங்குவா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கங்குவா படத்திற்காக தனது தோற்றத்தில் ரொம்பவே மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் சூர்யா. ஹேர் ஸ்டைல், கண் புருவங்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக அமைந்துள்ளது.
அதேபோல், ஜிம்மில் வெறித்தனமாக ஓர்க் அவுட் செய்துவரும் சூர்யா சிக்ஸ் பேக்கில் அசத்துகிறார். சில மாதங்களுக்கு முன்னர் கங்குவா படத்திற்காக சூர்யா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. அதனையடுத்து தற்போது இன்னொரு மிரட்டலான போட்டோவை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. கிரே ஷேடில் வெளியான இந்த போட்டோ சூர்யா ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.
டீ-ஷர்ட்டை நெஞ்சுக்கு மேலே தூக்கிவிட்டு தனது சிக்ஸ் பேக் உடலை காட்டி மெர்சல் செய்துள்ளார் சூர்யா. ஹாலிவுட் ஹீரோ லுக்கில் செம்ம மாஸ் காட்டும் இந்த போட்டோவை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம் சூர்யாவின் போஸ்டர், லுக் எப்படியிருந்தாலும் படம் நன்றாக வர வேண்டும். இல்லையென்றால் கங்குவா நிலை மோசமாகிவிடும் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியான போது, வீடியோ கேம் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











