காக்க காக்க படம் ரிலீஸ் அப்போ பிரியங்கா மோகன் வயதை கேட்டு அதிர்ந்து போன சூர்யா !
தென்னை : இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்
பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்
மார்ச் 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் காக்க காக்க படம் வெளியாகும்போது பிரியங்கா மோகன் வயதை கேட்டு சூர்யா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

முதல் முறையாக
சூரரைப்போற்று, ஜெய்பீம் என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சமூகத்திற்குத் தேவையான முக்கிய கருத்துகளையும் கூறி வருகிறார். அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த சூர்யா அந்த படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதல் முறையாக சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். மேலும் இந்த படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை
ஜெய்பீம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் முக்கியமான சமூகப் பிரச்சினை ஒன்றை கையிலெடுத்து பேச உள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. பசங்க, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம்,நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன்,புகழ், ரெடின் கிங்ஸ்லி ,தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். டாக்டர் படத்தில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மூன்றாம் வகுப்பு
சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் பட விழா நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் பிரியங்கா மோகன் தன்னிடம் வந்து காக்க காக்க படம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை என கூறினார். அப்போது தனியாக சென்று பிரியங்காவிடம் காக்க காக்க படம் ரிலீஸ் ஆகும்போது உங்களுக்கு என்ன வயது எனக் கேட்டதற்கு அப்பொழுது பிரியங்கா மோகன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். இதைக் கேட்ட நடிகர் சூர்யா அதிர்ந்து போயுள்ளார்.

இப்போது ஜோடியாக
காக்க காக்க படத்தை மூன்றாவது படிக்கும் போது பார்த்து ரசித்த ஒரு சிறுமி இப்போது தனக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பதை எதற்கும் துணிந்தவன் பட விழாவில் சூர்யா பகிர்ந்து கொண்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











