ஐசரி கணேஷ் மகள் திருமண விழா.. திடீரென என்ட்ரி கொடுத்த சூர்யா.. லீலா பேலஸில் அமர்க்களம்!
சென்னை: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கே பிரம்மாண்ட கோயில் செட் போட்டு ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் ஆட்டம் காண வைத்த ஐசரி கணேஷ் தனது மகள் ப்ரீத்தாவின் திருமணத்தை நாளை மே 9ம் தேதி பிரம்மாண்ட செட் போட்டு நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், ஐசரி கணேஷ் மகள் திருமணம் மாலத்தீவில் ட்ரீம் வெட்டிங்காக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தனது மகள் திருமணத்தை முன்னிட்டு சங்கீத் நிகழ்ச்சியை சென்னையில் உள்ள லீலா பேலஸில் கோலாகலமாக நடத்தியிருக்கிறார் ஐசரி கணேஷ். அதே லீலா பேலஸில் தனது ரெட்ரோ படத்தின் வெற்றி விழாவை சூர்யா நடத்திய நிலையில், ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவை அந்த நிகழ்ச்சிக்கே சென்று வாழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் 30 கோடிக்கு பிரம்மாண்ட செட் போட்டு திருமணத்தை நடத்தவுள்ள நிலையில், 15000க்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேல்ஸ் நிறுவனத்தின் தலைவர்: வேல்ஸ் பல்கலைக் கழகம், வேல்ஸ் கல்லூரி என சென்னையில் கல்வித் தந்தையாகவே விளங்கி வரும் ஐசரி கணேஷ் வேல்ஸ் இன்டர்நேஷனல் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் சிவா, பிரியா ஆனந்த் நடித்த சுமோ திரைப்படம் அவரது தயாரிப்பில் வெளியானது. மேலும், ஜெயம் ரவியின் ஜீனி மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களையும் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தையும் தயாரித்தவர் இவர் தான்.

மகள் திருமணம்: 30 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு தனது மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தப் போகிறாராம் ஐசரி கணேஷ். மேலும், மகளின் விருப்பப்படி மாலத்தீவிலும் ட்ரீம் வெட்டிங்கிற்கு பிளான் செய்திருக்கிறாராம். அவரிடம் வேலை பார்க்கும் நபர்களே 8 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளதால் ஒட்டுமொத்தமாக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் முதல் விஜய் வரை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தளபதி விஜய் என பல பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து மகளை வாழ்த்த வாருங்கள் என அழைத்துள்ளாராம். அனைத்து பிரபலங்களும் ஐசரி கணேஷ் உடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் நிலையில், அவருடைய மகள் ப்ரீத்தியின் திருமணத்தில் பல பிரபலங்கள் பங்கேற்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சூர்யா: 2டி நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ திரைப்படம் 104 கோடி வசூல் செய்ததாக போஸ்டர் வெளியிட்ட நிலையில், நேற்று லீலா பேலஸில் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது. படத்தின் லாபத்தில் இருந்து 10 கோடி ரூபாயை அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கினார். அதே லீலா பேலஸில் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவான சங்கீத் நடைபெற்ற நிலையில், சூர்யாவின் வருகையை அறிந்து ஐசரி கணேஷ் அவரை சந்தித்து, மகளை வாழ்த்தும் படி கேட்டுக் கொள்ள உடனடியாக சங்கீத் நடந்த இடத்துக்கு சென்று சூர்யா மணமக்களை வாழ்த்தினார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











