கங்குவா நஷ்டத்தை ஈடுகட்ட முடிவெடுத்த சூர்யா.. என்ன செய்யப்போறாரு தெரியுமா? நிம்மதியில் ஞானவேல் ராஜா
சென்னை: கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட படம் கங்குவா. பொருளாதார ரீதியாக நஷ்டம், விமர்சன ரீதியாக ஜெனரல் பப்ளிக்கில் இருந்து ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி வரை பலரும் படத்தை கழுவி ஊற்றி விட்டார்கள். இதனால் கடந்த ஆண்டு வெளியான படங்களில் கங்குவா படத்தை பெரிய டிசாஸ்டர், அதாவது பேரழிவு எனக் கூறலாம். இந்தப் படத்தால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், கங்குவா படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யா, ஒரு முடிவெடுத்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. படத்தின் தீஷா பதானி, கர்ணாஸ், கோவை சரளா, நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் கார்த்தி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கமிட் ஆன பின்னர், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட, இரண்டு படங்களில் இருந்து விலகியும் கொண்டார் சூர்யா. அதாவது, வணங்கான் மற்றும் புறநானூறு படங்களில் இருந்து விலகினார். இதில் புறநானூறு படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற பெயரில் உருவாகி வருகிறது.

கங்குவா படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து ஓவர் பில்டப் விட்டார். குறிப்பாக படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது. தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்லும் படமாக கங்குவா இருக்கும். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுவிட்டோம். படம் பாக்ஸ் ஆபிஸில் 2000 கோடிகளை அசால்ட்டாக வசூலிக்கும். படத்தின் பிரமாண்டமான வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என்றெல்லாம் கூறினார்.

கங்குவா: சூர்யாவும் படத்தின் புரோமோசனில் கலந்து கொள்ளும் போது, நெருப்பு மாதிரி ஒரு படம் வந்து கொண்டு உள்ளது என தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் ரிலீஸ் ஆன பின்னர் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் விமர்சகர்கள் தொடங்கி, பொதுமக்கள் வரை கடுமையாக விமர்சித்தனர். காரணம் படத்தின் திரைக்கதையில் பல ஓட்டைகள், தியேட்டரை விட்டு வெளியே ஓடி வந்து விடலாம் என யோசிக்க வைக்கும் அளவிற்கு மிகவும் மோசமான பின்னணி இசை, சொதப்பல் திரைக்கதை நகர்வு, எடுபடாத காட்சி அமைப்புகள் என நடிகர்களின் நடிப்பு, ஆர்ட் டிபார்ட்மெண்ட் மற்றும் ஒளிப்பதிவு தவிர மீதி அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

நஷ்டம்: கங்குவா படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் வரை பெரும் நம்பிக்கையோடு இருந்த ஞானவேல் ராஜா, அதன் பின்னர் டீப் சைலண்ட் மோடுக்கு போய்விட்டார். செய்தியாளர்களையே அவர் சந்திக்கவில்லை. பல திரையரங்க உரிமையாளர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதில் அளிக்கவில்லை. காரணம், கங்குவா மிக மோசமான தோல்வி படமாக அமைந்தது மட்டும் இல்லாமல், ஞானவேல் ராஜாவை பெரும் கடனாளியாக மாற்றியது.

முடிவு: இந்நிலையில் கங்குவா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், சூர்யா முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க முடிவெடுத்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு சம்பளம் என எதுவும் வாங்காமல் நடிக்கவும், படத்தின் லாபத்திற்கு பின்னர் சம்பளம் வாங்கிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம். சூர்யாவின் இந்த முடிவு ஞானவேல் ராஜாவை கொஞ்சம் நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் ஏற்கனவே ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடித்த 24 படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தான், கங்குவா படத்தில் ஸ்டுடியோ கிரீன் உடன் இணைந்து சூர்யா பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











