நண்பன் விஜய்யின் பெற்றோருடன் செல்ஃபி எடுத்த சூர்யா: வைரலோ வைரல்

By Siva

Recommended Video

விஜய் பெற்றோருடன் செல்ஃபி எடுத்த நடிகர் சூர்யா- வீடியோ

சென்னை: சூர்யா தனது நண்பர் விஜய்யின் பெற்றோருடன் எடுத்த செல்ஃபி வைரலாகியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கஸ்தூரி செல்ஃபி விவகாரம் குறித்து கார்த்தி முன்பே சிவகுமாரை கலாய்த்து வாங்கிக் கொண்டார். இந்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சூர்யா செல்ஃபி எடுத்துள்ளார்.

அவர் செல்ஃபி எடுத்தது விஜய்யின் பெற்றோருடன்.

 செல்ஃபி

செல்ஃபி

விஜய்யின் பி.ஏ. ராஜேந்திரனின் மகள் சந்தியாவுக்கும், விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 3ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

செல்ஃபி

விஜய் பி.ஏ. வீட்டு விசேஷத்தில் சூர்யா தனது தம்பி கார்த்தியுடன் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த விஜய்யின் அம்மா சோபா, அப்பா எஸ்.ஏ. சி.யுடன் சேர்ந்து சூர்யா செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

வைரல்

சூர்யா எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த செல்ஃபியை விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.

எளிமை

தனது பி.ஏ. மகளின் நிச்சயதார்த்தத்திற்கு விஜய் குடும்பத்துடன் வந்தது ரசிகர்களை கவர்ந்துவிட்டது. எங்க விஜய் அண்ணா ரொம்ப சிம்பிள், அனைவரையும் மதிப்பவர் என்று பெருமையாக கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X