Suriya: கருப்பு வெற்றி.. சூர்யாவுக்கு கொக்கி போட்ட CM விஜய் பட தயாரிப்பாளர்.. முரட்டு சம்பவம் லோடிங்!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. படம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா என எல்லா பக்கமும் பாக்ஸ் ஆபீஸை நிறைத்துக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் சூர்யாவின் கால்ஷீட்டை சூட்டோடு சூடாக வாங்கி உள்ளது கேவிஎன் நிறுவனம்.

சூர்யா, த்ரிஷா, நட்ராஜ், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. படத்தை ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Suriya Teams Up With KVN Productions After Karuppu Success Director H Vinoth in Talks

நடிகர் சூர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிடைத்த வெற்றிப் படமாக கருப்பு படம் உள்ளது. படம் முதல் மூன்று நாளில் ரூபாய் 147 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்தது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இது மட்டும் இல்லாமல் படம் வெளியாகி மே 19ஆம் தேதியுடன் ஐந்து நாட்கள் ஆவதால் இந்த ஐந்து நாட்களில் ரூபாய் 160 முதல் 175 கோடிகள் வரை வசூலித்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. எப்படியும் இந்த வார இறுதிக்குள் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 140 கோடிகள் வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த படம்: இப்படி இருக்கையில், சூர்யா தற்போது விஸ்வநாதன் & சன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் படம் குறித்த தகவல்கள் என்ன என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் சூர்யாவின் கால்ஷீட் புக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Suriya Teams Up With KVN Productions After Karuppu Success Director H Vinoth in Talks

ஹெச். வினோத்: இது மட்டும் இல்லாமல், படத்தை இயக்குநர் ஹெச். வினோத்தை இயக்கச் சொல்லலாமா என்று பரிசீலித்து வருவதாகவும், ஹெச். வினோத்திற்கு சம்மதம் என்றால் சூர்யாவிடம் கதை சொல்லச் சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X