Suriya: சூர்யான்னா சும்மாவா... வெயிட் போட்டது எதுக்குன்னு தெரியுமா... இது கங்குவா மோட் கிளிக்

சென்னை: சூர்யா தற்போது தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் கங்குவா என சில தினங்களுக்கு முன்னர் படக்குழு அறிவித்திருந்தது.

கங்குவா படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், எடை அதிகமான சூர்யாவின் போட்டோ வைரலானது.

 Suriya: The Kanguva team has released Suriyas latest Gym workout video

இந்நிலையில், சூர்யாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

சூர்யாவின் லேட்டஸ்ட் கங்குவா கிளிக்
சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கங்குவா, சூர்யாவின் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிஸ்டாரிக்கல் ஜானரில் ஃபேண்டசி படமாக உருவாகும் கங்குவா படத்திற்காக சூர்யா செம்ம ஹார்ட்வொர்க் செய்து வருகிறார். இரண்டு அல்லது மூன்று கேரக்டர்களில் சூர்யா நடிப்பதாகவும், இது எல்லாமே மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், முதலில் செம்ம ஃபிட்னஸாக வலம் வந்த சூர்யா, கடந்த சில தினங்களாக வெயிட் போட்டு வித்தியாசமாக காணப்பட்டார்.

சூர்யாவின் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி இருந்தன. மேலும், இப்படி வெயிட் போடுவதற்காக சூர்யா தனது டயட்டை விட்டுவிட்டு பிரியாணி சாப்பிட்டு வந்தார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது படக்குழு. சூர்யாவின் இன்னொரு லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது.

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் சூர்யாவின் ஃபிட்னஸை ரசிகர்களுக்காக ஜூம் செய்து வீடியோவாக எடுத்து எடிட் செய்துள்ளது. மேலும், அந்தப் போட்டோவை 'இது கங்குவா மோட்' என்ற கேப்ஷனுடன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இது ரோலக்ஸின் கங்குவா மோட் என பாராட்டி வருகின்றனர். மேலும், சூர்யா இதுக்காக தான் வெயிட் போட்டாரா எனவும் கேட்டு வருகின்றனர்.

ஒரே படத்திற்காக ஃபிட்னஸ் செய்துவிட்டு, பின்னர் உடல் எடையை அதிகரித்த சூர்யா, தற்போது மீண்டும் பிட்னஸ் மோடுக்கு வந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். விரைவில் கங்குவா படத்திற்காக மிக பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை எடுக்க சிறுத்தை சிவா பிளான் செய்துள்ளாராம். அதற்காகவே சூர்யா மீண்டும் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகிறாராம். இந்நிலையில், சூர்யாவின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X