Suriya:“நான் இப்போ நந்தா இல்ல.. பான் இந்தியா சூர்யா” வணங்கான் ஸ்பாட்டில் கெத்து.. பாலா கொடுத்த பல்பு
சென்னை: சூர்யா தற்போது கங்குவா படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். முன்னதாக பாலா இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதற்கான காரணம் குறித்தும் சூர்யா - பாலா இடையேயான பிரச்சினை குறித்து பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.
பான் இந்தியா சூர்யாவுக்கு பல்பு
கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் ஹீரோவாக அறிமுகமான சூர்யாவுக்கு பெரிய பிரேக் கொடுத்தது பாலா இயக்கிய நந்தா தான். அறிமுகமான புதிதில் நடிப்பே வரவில்லை என பல விமர்சனங்களை சந்தித்தார் சூர்யா. இதனால் துவண்டு கிடந்த சூர்யாவுக்கு பாலாவின் நந்தா தான் புதிய அடையாளத்தை கொடுத்தது.

அதன்பின்னர் சூர்யாவின் கேரியர் மெளனம் பேசியதே, காக்க காக்க போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வேற லெவலுக்குச் சென்றது. நந்தாவுக்குப் பின்னர் சூர்யா பாலா கூட்டணி பிதாமகன் படத்தில் இணைந்தது. இதில் சீயான் விக்ரமும் லீடிங் ரோலில் நடித்திருந்தார். அதன்பின்னர் சூர்யா - பாலா கூட்டணி இணையவில்லை என ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு வணங்கான் அப்டேட் நம்பிக்கையை கொடுத்தது.
அதேபோல் வணங்கான் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்றது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற்ற வணங்கான் படப்பிடிப்பில் சூர்யாவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், திடீரென வணங்கான் படத்தில் இருந்து விலகுவதாக சூர்யா அறிக்கை வெளியிட்டார். அதேபோல் பாலாவும் வணங்கானில் இருந்து சூர்யா விலகியது பற்றி அபிஸியலாக அறிவித்தார்.
அதன் பின்னர் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது வணங்கான். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கிவிட்டன. இதனிடையே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதாவது நந்தா படத்தில் நடித்தபோது சூர்யாவை 'அவன்... இவன்..' என ஒருமையில் அழைப்பதும், சரியாக நடிக்கவில்லை என்றால் திட்டுவதும் பாலாவின் வழக்கம்.
வணங்கான் படப்பிடிப்பிலும் சூர்யாவை நந்தா ஷூட்டிங்கின் போது உரிமையோடு வேலை வாங்கியதை போன்று ட்ரீட் செய்துள்ளாராம். இதனால் ஒருகட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த சூர்யா, பாலாவிடம் இதற்கு மேல் செட்டாகாது என பின்வாங்கி விட்டாராம். அதாவது நான் இப்போது பான் இந்தியா ஹீரோ என்பதால் மரியாதையாக நடத்த வேண்டும் என விரும்பியுள்ளார். மேலும், தான் விலகிவிட்டால் வணங்கான் படம் ட்ராப் ஆகும், அதனால் பாலா தனது பழக்கத்தை மாற்றிக் கொள்வார் என சூர்யா நினைத்துள்ளார். ஆனால் அவருக்கே பல்பு கொடுக்கும் விதமாக அருண் விஜய்யை கமிட் செய்து, இப்போது படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் பாலா.


Click it and Unblock the Notifications











