ரிஸ்க் எடுக்க விரும்பல...செப்டம்பரில் தான் வாடிவாசல் ஷுட்டிங்
சென்னை : சமீபத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் தளர்வுகளில் சினிமா படப்பிடிப்புக்கள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கோலிவுட் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் படப்பிடிப்பு வேலைகளை மீண்டும் துவக்கி உள்ளனர். சில பெரிய நடிகர்களின் பட வேலைகள் ஜுலை மாதத்தில் துவக்கப்பட உள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கு இசை அமைக்கும் வேலைகளை ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே துவக்கி விட்டார். சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பல மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.

செப்டம்பரில் தான் வாடிவாசல்
லேட்டஸ்ட் தகவலாக வாடிவாசல் பட வேலைகளை செப்டம்பர் மாதத்தில் தான் மீண்டும் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். கொரோனா பரவல் நிலை முழுவதுமாக கட்டுக்குள் வந்ததும் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

ஜல்லிக்கட்டு தான் படம்
வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. இதற்காக நாவலின் உரிமத்தை, எழுத்தாளர் சி.எஸ்.செல்லப்பாவிடம் இருந்து தாணு வாங்கி உள்ளார். தலைப்பை வைத்து பார்க்கும் போது, ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட படம் என தெரிகிறது.

ரிஸ்க் எடுக்க விரும்பல
சில காட்சிகள் நூற்றுக்கணக்கான ஜுனியர் ஆர்டிஸ்ட்களை வைத்து எடுக்க வேண்டி உள்ளதாம். தற்போதைய சூழலில் கூட்டத்தை கூட்டி, ரிஸ்க் எடுக்க விரும்பாததால் தான் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் துவக்க உள்ளனர்.

படத்தின் கதை இது தானா
கோயில் திருவிழா தொடர்பாக பழிவாங்குவது தான் படத்தின் கதையாம். இதில் தந்தை - மகன் என இரண்டு வேடங்களில் சூர்யா நடிக்க உள்ளார். வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பிற்கு முன் ஜுலையில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

வெற்றிமாறனின் திட்டம்
வாடிவாசல் படத்திற்கு முன் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு வேலைகளை ஜுலையில் மீண்டும் துவக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். அடுத்தடுத்த பட வேலைகளால் கோலிவுட்டே பயங்கர பிஸியாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











